மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், பாஜக படுதோல்வி அடையும் என்றும், இரட்டை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெல்வதே கடினம் என்றும் கார்ப்பரேட் தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு (ஐ-பிஏசி) என்ற பெயரில், தேர்தல் பிரச்சாரம் குறித்த ஆலோசனைகள் தரும் நிறுவனத்தின் தலைவராக பிரஷாந்த் கிஷோர் உள்ளார்.
மேற்கு வங்க தேர்தல் – குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக
இந்நிறுவனம், 2011 ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு பிரச்சார வேலைகளை செய்துக்கொடுத்தது. அதைத்தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜகாவின் தேர்தல் பிரச்சாரங்களை முழுமையாக பொறுப்பெடுத்து நடத்திக்கொடுத்து, அக்கட்சி வெற்றி பெற குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உதவியது. பிரசாந்த கிஷோரின் நிறுவனம் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 19 ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்கத்திற்கு வருகை தந்தபோது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் சுவேந்து ஆதிகாரி உட்பட சில தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
மேற்கு வங்கத்தில் பாஜக பேரணி – பங்கேற்கச் சென்ற தலைவர்களின் வாகனங்கள் மீது கல்வீச்சு
அடுத்த ஆண்டு, மேற்குவங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பாஜகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 21) பிரஷாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிந்துள்ளார். அதில், “பாஜக ஆதரவு ஊடகங்கள் சொல்வது போல் அல்லாமல், மேற்கு வங்க தேர்தலில் இரட்டை இலக்க இடங்களைப் பெறுவதற்கே அக்கட்சி கஷ்டப்படும் என்பது தான் உண்மை.” என்று தெரிவித்துள்ளார்.
For all the hype AMPLIFIED by a section of supportive media, in reality BJP will struggle to CROSS DOUBLE DIGITS in #WestBengal
PS: Please save this tweet and if BJP does any better I must quit this space!
— Prashant Kishor (@PrashantKishor) December 21, 2020
மேலும், “ஒருவேளை பாஜக அதிக இடங்களை பெற்றால், நான் இந்த இடத்தை விட்டு வெளியேறிவிடுகிறேன்.” என்றும் அவர் சவால் விட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.