பாஜக ஒரு இந்து ராஜ்ஜியத்தை மட்டும் உருவாக்க விரும்பவில்லை, மாறாக நாஜி ஜெர்மனியைப் போன்ற ஒரு அரசையே இந்தியாவில் உருவாக்க விரும்புகிறது என்று பிரஷாந்த் பூஷண் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து, இன்று (பிப்பிரவரி 4) உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
Shockingly perverse! Uttarakhand police says that passports won't be issued to people who post on social media against Govt! Bihar govt says that protestors will not be given govt jobs!
The BJP wants not merely a Hindu Rashtra, but a police state like in Nazi Germany— Prashant Bhushan (@pbhushan1) February 4, 2021
அதில், “அதிர்ச்சியூட்டும்படியாக இருக்கிறது! அரசிற்கு எதிராகச் சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படாது என்று உத்தரகண்ட் காவல்துறையினர் கூறுகின்றனர். போராட்டங்கள் செய்பவர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்படாது என்று பீகார் அரசு கூறுகிறது. பாஜக ஒரு இந்து ராஜ்ஜியத்தை மட்டும் உருவாக்க விரும்பவில்லை, மாறாக நாஜி ஜெர்மனியைப் போன்ற ஒரு அரசையே இந்தியாவில் உருவாக்க விரும்புகிறது.” என்று அவர் விமர்சித்துள்ளார்.
முடக்கிய கணக்குகளை மீண்டும் செயல்படுத்திய ட்விட்டர் – ஒரே நாளில் பல்டி
அண்மையில், விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடைய கணக்குகளை முடக்கிய ட்விட்டர் நிறுவனத்தைக் குறித்த தனது ட்விட்டர் பதிவில், “அதிர்ச்சி! சட்டபூர்வமான கோரிக்கைகளின் அடிப்படையில் விவசாயிகள் போராட்டங்கள்பற்றிய செய்திகளை வழங்கும் பல கணக்குகளை ட்விட்டர் இந்தியா முடக்குகிறது. யாருடைய கோரிக்கை? அரசுடைய கோரிக்கையா? நிச்சயமாக எந்த நீதிமன்றத்தின் கோரிக்கையும் இல்லை.” என்று பிரஷாந்த் பூஷண் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.