Aran Sei

மேற்குவங்கத்தில் பாஜக 100 சீட் பெற்றால் தொழிலில் இருந்து விலக தயார் – பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

மேற்குவங்க மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத்தேர்தலில் பாஜக 100 தொகுதிகளுக்கும் குறைவாகவே வெற்றி பெரும் என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜக வெற்றி பெறுவது குறித்து பிரசாந்த் கிஷோர் பேசிய காணொளி வெளியானதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு முழு பேருந்தை சோற்றுக்குள் மறைத்த நிதின் கட்கரி – வெளிப்படும் பாஜகவின் ஊழல் சாம்ராஜ்யம்

இதற்கு முன்னர் தொலைபேசி உரையாடலில் பேசிய பிரசாந்த் கிஷோர் , மேற்வங்க தேர்தல் பாஜக மூன்று இலக்க தொகுதிகளை வெற்றிபெறும் என்றும், பட்டியல் இனத்தவர்களும், மட்டுவாஸ் இனத்தவர்களும் பாஜகவிற்கு பெருமளவில் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார்.

இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து அதை பாஜக கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் அமித் மாள்வியா ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், “நான் கூறியதை பாஜகவினர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர், பாஜக 100 தொகுதிகளுக்கும் குறைவாகவே வெற்றி பெறும் ” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் , பாஜக இரண்டு இலக்க தொகுதிகளைப் பெறவே திணறும் என்றும் , நான் சொன்னது நடைபெறவில்லை என்றால் நான் இந்தத் துறையில் இருந்தே வெளியேறுகிறேன் என்றும் மற்றொரு ட்விட்டர் பதிவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பதிவிட்டுள்ளார்.

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் திமுகவிற்கும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆலோசனை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்