Aran Sei

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க நடைமுறையில் வெளிப்படைத்தன்மை தேவை – குடிமக்கள் குழு கோரிக்கை

மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால் தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை தேவை  என்று தேர்தல் குடிமக்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் குடிமைப்பணியாளர்கள், பல்கலைக்கழகப் பேராசியர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் அடங்கிய தேர்தலுக்கான குடிமக்கள் குழு (CCE) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் VVPATகளில் (வாக்காளர் யாருக்கு வாக்களித்திருக்கிறோம் என உறுதிப்படுத்திக்கொள்ளும் வசதி) செய்ய வாய்ப்பிருக்கும் முறைகேடுகள் மற்றும் அது சார்ந்த ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை ஜனவரி 30ல் வெளியிட்டிருப்பதுடன், EVM முறை வாக்குப்பதிவு மக்களாட்சியின் நெறிமுறைகளுக்குட்பட்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகுர் தலைமை வகிக்கும் 8 பேர் கொண்ட குடிமக்கள் குழுவில் முன்னாள் CIC வஜாஹத் ஹபிபுல்லா, முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன், பொருளியலாளர் அருண்குமார், குடிமை சமூக செயல்பாட்டாளர் ஜான் தயாள், மூத்த பத்திரிகையாளர் பமீலா பிலிப்போஸ் மற்றும் டெல்லி ஐ.ஐ.டியின் கணினி அறிவியல் பேராசிரியர் டாக்டர்.சுபசிஸ் பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

விவசாயி உயிரிழப்பு: “நான் குண்டு துளைத்த காயங்களை பார்த்தேன்” – பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தகவல்

CCE-ன் வல்லுநர் குழு EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் முக்கிய மக்களாட்சி கோட்பாடுகளின்படி (கோட்பாடுகள் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளன) அமைக்கப்பட்டுள்ளனவா என்று மதிப்பாய்வு செய்து, “EVM & VVPAT முறை இந்திய மக்களாட்சி தேர்தல்களுக்கு உகந்தவையா?” என்ற தலைப்பில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

“அறிக்கை தயாரானபோது தேர்தல் ஆணையத்தைப் பலமுறை தொடர்பு கொண்டோம், ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை, பல துறைசார் வல்லுநர்கள் இதற்காக உழைத்துள்ளனர், இப்பொழுதாவது தேர்தல் ஆணையம் இதைக் கண்டுக்கொள்ள வேண்டும்” என ஜான் தயாள் தெரிவித்துள்ளார்.

2019 பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியபோதும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதைக் கண்டித்து ஊடகம் மற்றும் குடிமை சமூக குழுக்கள் கண்டனக்குரல்கள் எழுப்பிய நிலையில் மார்ச் 5, 2020 ல் குடிமக்கள் குழு ஏற்படுத்தப்பட்டது.

நாட்டுப்பற்றுக்கு மதம் இல்லை – மோகன் பக்வத்திற்கு ஆதாரம் தருகிறோம் – ஃபைசான் முஸ்தஃபா

“2019 தேர்தலில் VVPAT மற்றும் EVM களுக்கிடையே பல முரண்பாடுகள் தென்பட்டன, எனவே வாக்குகளோடு சேர்த்து VVPAT எண்ணப்பட வேண்டும், இல்லாவிட்டால் முறைகேடுகளைக் கண்டுபிடிக்க முடியாது” என்று முன்னாள் குடிமைப்பணி ஊழியர் ஜவஹர் சிர்கார் இந்த அறிக்கையைக் கொல்கத்தா பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடும்போது தெரிவித்தார்.

வாக்காளர் வாக்கு செலுத்தும்போது யாருக்கு வாக்களித்தோம் என அவர் தெரிந்து கொள்வதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், எந்தவொரு சிறு பிரச்சினையும் இல்லாமல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டும். வாக்காளரின் தெரிவு தவறாகப் பதியப்பட்டுவிடக் கூடாது என்பதில் குடிமக்கள் குழு உறுதியாக இருக்கிறது.

அறிக்கையைத் தயாரிக்கும்போது பூர்வி.எல்.வோரா, ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பகிரத் நரஹரி, நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலோக் சவுத்ரி மற்றும் பல தேசிய/சர்வதேச வல்லுநர்களின் கருத்துகள் பெறப்பட்டுள்ளன.

’விவசாய சட்டங்களால் நன்மை என்றால் பஞ்சாயத்து தேர்தலை அறிவிக்க ஏன் தாமதம் யோகிஜி’? – ஜெயந்த் சவுத்ரி கேள்வி

“சமீபகாலங்களில் இந்திய மக்களாட்சியில் நடக்கும் முறைகேடுகளை உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது, அதனால் தான் நேர்மையான, நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் குடிமக்கள் குழு விரும்புகிறது. யாருக்கு வாக்கு செலுத்தினோம் எனத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு வாக்காளரின் உரிமை, தற்போதைய தேர்தல் நடைமுறைகள்குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வண்ணம் அடுத்து என்ன செய்யப்பட வேண்டும் என மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இந்த அறிக்கையின் நோக்கம்” என்று குடிமக்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஜி.தேவசகாயம் தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகள் மற்றும் அதற்கான ஆலோசனைகள் பின்வருமாறு:

சரிபார்க்கும் வசதி:

தற்போதைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சோதனை செய்யப்பட முடியாததாக இருக்கிறது, முன்னரே தீர்மானிக்கப்பட்ட முறைகளில் கண்துடைப்புக்காகச் சோதனை செய்து இயந்திரம் சரி என்று காண்பிப்பது மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது, எனவே தேர்தல் ஆணையம் இயந்திரங்களின் உண்மைத்தன்மைக்கு உத்திரவாதம் அளிப்பதோடு அதைப் பொதுவில் யார் வேண்டுமானாலும் சோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்ளலாமென அறிவிப்பதன் மூலம் போலி வாக்குகள் செலுத்தப்படுவதை தடுக்கலாம்.

எங்களைப் பார்த்துப் பாஜகவின் பி டீம் என்பதா? – ஓவைசி கண்டனம்

ஹாக்கிங் செய்யப்பட வாய்ப்பு:

இயந்திரங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்க முடியாதபோது அவை ஹாக்கிங் செய்யப்பட வாய்ப்பில்லாதவையெனச் சொல்ல முடியாது. எனவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹாக்கிங் செய்ய முடியாதவை அல்ல என்பதை கருத்தில் கொண்டு தான் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

தணிக்கை:

வாக்காளர்கள் ஏறத்தாழ அருகருகேயான எண்ணிக்கையில் வாக்குகள் பெறும்போது ஒரு சில இயந்திரங்களில் முறைகேடுகள் செய்து தேர்தல் முடிவுகளை மாற்றிவிட முடியும், எனவே குடிமை சமூகமும், அரசியல் கட்சிகளும் கேட்பது போலக் குறைந்தபட்சம் 30% முதல் 50% வரையிலான இயந்திரங்களைச் சரிபார்க்க வேண்டும், அதோடு வாக்குகளையும் VVPAT ரசீதுகளையும் தேர்தலுக்குப் பின் ஒப்பிட்டுப் பார்த்துத் தணிக்கை செய்வதன் மூலம் உண்மையான தேர்தல் முடிவுகளை அடையலாம்.

குடியரசு தின வன்முறை: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

வாக்கு எண்ணிக்கை:

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வாக்கு எண்ணிக்கை கடுமையான தணிக்கைக்குட்படுத்தப்பட வேண்டும். ஏதோ அந்தந்த நேரத்திற்கேற்றாற் போல முறையற்று தணிக்கை செய்யாமல் முறையான தணிக்கை விதிகளைக் கொண்டு வாக்குகள் VVPAT ரசீதுகளோடு ஒப்பிடப்பட வேண்டும். வாக்கு வித்தியாசத்தைப் பொறுத்து சில நேரங்களில் அனைத்து VVPAT ரசீதுகளும் எண்ணப்பட வேண்டியும் இருக்கலாம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்