Aran Sei

மும்பை மின்வெட்டு: இந்தியாவின் மின்சார கட்டமைப்பில் சீன வைரஸ் – அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு

credits : the indian express

கடந்த ஆண்டு ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனை காரணமாக, இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையில் மோதல் நடைபெற்றது. இந்த மோதலில், இருதரப்பையும் சேர்த்து 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் கழித்து, கல்வானிலிருந்து 1500 மைல்கள் தொலைவில் உள்ள மும்பை மாநகரத்தில் (அக்டோபர் 13), மின் வெட்டு ஏற்பட்டது. இந்த மின்வெட்டினால் மும்பை மாநகரமே பெரும் அவதிக்குள்ளானது.

கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களை அவமதித்ததாக புகார் – சீனாவில் 3 பேர் கைது

20 லட்சம் மக்கள் வசிக்கும் இந்தியாவின் பொருளாதார தலைநகரமான மும்பையில், மின்சார ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது, பங்குச் சந்தைகள் மூடப்பட்டன, கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்த சமயத்தில் மருத்துவமனைகள் பல சிக்கல்களை சந்தித்தன.

இந்நிலையில், இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனைக்கும், மும்பை மாநகரில் ஏற்பட்ட மின்வெட்டுக்கும் தொடர்பு இருப்பதாக, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இணைய பாதுகாப்பு நிறுவனமான ரெக்கார்டட் ஃப்யுச்சர் (Recorded Future) தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் மின்சார விநியோகத்தை நிர்வகிக்கும் உள்கட்டமைப்பில், சீனா வைரஸை அனுப்பி சைய்பர்  தாக்குதலை நிகழ்த்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

சீனா – வீட்டு வேலைக்காக மனைவிக்கு ரூ 5 லட்சம் நிவாரணம் – விவாகரத்து நீதிமன்றம் உத்தரவு

இந்த ஊடுருவலுக்குப் பின்னால், சீன அரசால் நிதியளிக்கப்பட்டு செயல்படும் ‘ரெட் எக்கோ’ என்ற அமைப்பு இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் பல்வேறு ஹேக்கர்களை கொண்டு, இந்தியாவின் மின்சார விநியோக கட்டமைப்புக்குள் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ‘ரெட் எக்கோ’ நிறுவனம் “இந்தியாவின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான உள்கட்டமைப்பு மையத்திற்குள், திட்டமிட்டு நுழைந்து, கால் பதிக்க முயன்றிருப்பதாக” ரெக்கார்டட் ஃபியுச்சர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, ஸ்டுவர்ட் சாலமன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஊடகவியலாளர்கள் தாமாக ஆன்லைனில் செய்தி வெளியிட தடை- ஊடகவியலாளர் கூட்டமைப்பு கண்டனம்

மும்பையில் மின்வெட்டு ஏற்பட்ட சமயத்திலேயே, இதுசீன பின்னணியில் ஏற்பட்ட சைபர் தாக்குதல் என செய்தி நிறுவனங்கள் கூறியதாகவும், அதன் பின்னர், அது தொடர்பான அறிக்கைகளையோ தகவல்களையோ இந்திய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ரெக்கார்டட் ஃபியுச்சர் நிறுவனம், மும்பையில் ஏற்பட்ட மின்வெட்டு, சீனாவின் திட்டமிட்ட தாக்குதல் என, இந்திய அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும், இது தொடர்பான செய்திகள் வெளியில் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வர்த்தக கூட்டாளிகளில் சீனா முதலிடம் – எல்லை பிரச்சனைக்குப் பிறகும் உயர்ந்துள்ள வர்த்தகம்

இந்த ஆய்வின் மூலம், ஒரு எதிரி நாட்டின் மின்சார கட்டுமானத்தில் அல்லது பிற முக்கியமான உட்கட்டமைப்பில் வைரஸை ஊடுருவச் செய்வது என்பது, ஆக்கிரமிப்பு மற்றும் தடுப்பு ஆகியவற்றின் புதிய வடிவமாக மாறியுள்ளது தெரியிவந்துள்ளது. மேலும் ”இந்தியா சீனாவுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனையில், இந்தியா அதிக அழுத்தம் கொடுத்தால், இந்தியா முழுவதும் எரியும் விளக்குகள் அணைக்கப்படும்” என்கிற எச்சரிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.

’சீனா என்ற வார்த்தையை உச்சரிக்க அஞ்சுகிறாரா பிரதமர் மோடி?’ – கார்த்திக் சிதம்பரம்

இந்த சம்பவம் ”இந்தியா தனது எல்லைக் கோரிக்கைகளை மிகத் தீவிரமாக முன்வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கான பதிலை சீனா கொடுத்துள்ளதா?” எனும் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சைபர் தொழிற்நுட்ப வல்லுநரான ஹுடா ”சீனா ஒரு சமிக்கையை காட்டியுள்ளது. இது போன்று ஒரு காரியத்தை (சைபர் தாக்குதல்) எங்களால் பேரிடர் காலத்தில் கூட செய்ய முடியும்”. என சீனா உணர்த்த முயன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் சீன தொலைகாட்சிக்குத் தடை – பதிலடியாக பிபிசிக்கு தடைவிதித்த சீனா

இதையடுத்து, இந்தியாவின் மின்சாரத் துறையில் பயன்படுத்தப்படும் சீனப் பொருட்களை, மாற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு மோடிக்கு ராணுவ அதிகாரிகள் கோரிக்கை விடுவித்துள்ளனர்.

இந்தியாவிற்குள் சீனாவின் புதிய கிராமம் – ’மோடிஜி, எங்கே உங்கள் 56 இன்ச் மார்பு?’ – காங்கிரஸ் கேள்வி

மேலும், எல்லைப் பிரச்சனையால், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் பதற்றங்கள் அதிகரித்த நிலையில், வெறும் ஐந்து நாட்களில், சீன ஹேக்கர்கள் இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் வங்கி உள்கட்டமைப்பு ஆகியவற்றில் 40,300 ஹேக்கிங் முயற்சிகளை கட்டவிழ்த்துவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

(தி நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்