Aran Sei

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மோடியை விமர்சிக்கும் சுவரோட்டிகள் – 9 பேரை கைது செய்த டெல்லி காவல்துறை

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக மோடியை விமர்சிக்கும் சுவரோட்டிகள் ஒட்டிய 9 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பல மாவட்டங்களில் 10 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு டெல்லியின் கல்யாண்புரியில் கைது செய்யப்பட்ட 4 பேரும் அப்பகுதி ஆம் ஆத்மி கவுன்சிலர் தீரேந்திர குமார் சார்பாக சுவரொட்டிகளை ஒட்டியதாக காவல்துறையினர் தெரிவித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் வருத்தம்

இது தொடர்பாக தீரேந்திர குமாரிடம் விசாரிக்க இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கும் நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எதுவும் தெரியாது என தீரேந்திர குமார் கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

டெல்லியின் பல பகுதிகளில், “மோடி ஜி ஹுமாரே பச்சோன் கி வாக்சின் விதேஷ் க்யோன் பேஜ் தியா (எங்கள் குழந்தைகளின் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்கள்?)” என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறுவடைக்குப் பின் போராட்டக்களம் திரும்பிய விவசாயிகள் – கொரோனா பரப்புவதாக எழும் அவதூறுகளுக்கு விவசாய சங்கம் கண்டனம்

”இந்தத் தகவலின் பெயரில், அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், 10 முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டிருக்கின்றன” என அந்த அதிகாரி தெரிவித்திருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

கிழக்கு டெல்லியின் துணை ஆணையர் சஞ்சய் செஹ்ராவத், ”கிழக்கு டெல்லியில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 860 சுவரொட்டிகள் மற்றும் 20 பதாகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணையின்போது, ஆம் ஆத்மி கவுன்சிலர் இந்தச் சுவரோட்டிகளை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சரிபார்க்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறியிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்