Aran Sei

ஒடிடி தளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகின்றன – உச்ச நீதிமன்றம் கருத்து

credits : the indian express

நெட்ஃப்லிக்ஸ், அமேசான் போன்ற ஒடிடி (இணைய வழி திரை) தளங்கள், ஆபாசப் படங்களை வெளியிடுகிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், பாலிவுட் நடிகர்களான சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்டோர் நடித்த, தாண்டவ் எனும் 9 பாகங்களை கொண்ட வெப் சீரிஸ் (இணைய வழி தொடர்) அமேசான் தளத்தில் வெளியானது.

இந்தத் தொடரில் வரும் காட்சிகள் இந்து கடவுள்களை அவமதித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. சில அமைப்புகள் இந்தத் தொடரை ஒளிபரப்பிய அமேசான் அலுவலகத்தின் முன் போராட்டங்களையும் நடத்தினர்.

`முஸ்லிம்களைத் தீவிரவாதியாகக் காட்டினால் வரவேற்பு; நியாயத்தைப் பேசினால் தடை’ – இயக்குநர் அரவிந்

பாஜகவைச் சேர்ந்த மனோஜ் கோடக், ராமேஷ்வர் ஷர்மா, ராம் கடம் ஆகியோர், தாண்டவ் தொடரை தடை செய்யக் கோரியும், ஓடிடி தளங்களுக்கு தணிக்கை குழுவை உருவாக்க கோரியும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

தாண்டவ் வெப் சீரிஸ் விவகாரம்: இந்து மதத்தை இழிவு செய்வதா? – நீதிபதி கடும் கண்டனம்

அமேசான் இந்தியாவின் உள்ளடக்கத் தலைவர் அபர்ணா புரோஹித், இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ணா மெஹ்ரா, எழுத்தாளர் கவுரவ் சொலங்கி மற்றும் பலர் மீது பல்வேறு மாநிலங்களில் புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295 ( வழிபாட்டுத் தலத்தை அவமதித்தல்), 505 ( பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்) , 469 (நற்பெயருக்கு தீங்கு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

“புரட்சியின் கப்பல் போட்டம்கின்” – 95 ஆண்டுகள் கடந்தும், சிறந்த படங்களின் பட்டியலில் நீடிக்க காரணம் என்ன?

இதில், அபர்ணா புரோஹித் மீது மட்டும், பத்து மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இந்த இணைய வழித்தொடர் ஒரு புனைவுக்கதை எனவும், எந்தவொரு சமூகத்தின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஓடிடி (OTT) தளங்கள் மீது தார்மீக கண்காணிப்பு : இந்திய தணிக்கை சகாப்தத்தின் சமீபத்திய நிகழ்வு

இந்த வழக்கு நீதிபதி சித்தார்த் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ”மனுதாரர், விழிப்புணர்வு இல்லாமலும், பொறுப்பற்ற முறையிலும், இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான திரைப்படத்தை வெளியிட அனுமத்தித்ததால், அவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, அவரது அடிப்படை வாழ்க்கை உரிமை மற்றும் சுதந்திரத்தையும், நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி பாதுகாக்காது” என தெரிவித்த நீதிமன்றம், அபர்ணாவின் மனுவை தள்ளுபடி செய்தது.

முத்தையா முரளிதரனின் சுழலும், விஜய் சேதுபதியின் விக்கெட்டும் – பாமரன் (பகுதி – 3)

இந்நிலையில் அபர்ணா புரோஹித், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷன் மற்றும் சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

Bad Boy Billionaires – ஹீரோக்களின் பின்னணி : ஷியாம் சுந்தர்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”பாராம்பரியமாக சினிமா பார்க்கும் முறை அழிந்து விட்டது. பொதுமக்கள் தற்போது திரைப்படங்களையும், தொடர்களையும் (இணைய வழி திரை) ஒடிடி தளங்களில் காணத் தொடங்கி விட்டனர். இந்த தளங்களுக்கு ஏதேனும் தணிக்கை இருக்கிறதா? இந்த தளங்கள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த தளங்களில் ஆபாசப் படங்களும் வெளியாகின்றன” என தெரிவித்துள்ளதாக தி இந்து –வின் செய்தி கூறுகிறது.

இந்தி சினிமாவை விழுங்க முயற்சிக்கும் பாஜக

அமேசான் உள்ளடக்க தலைவர், அபர்ணா புரோஹித் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோதகி, இந்த வழக்கு ஆபாச படம் தொடர்பானது இல்லை, கருத்துரிமை தொடர்பானது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், திரையரங்குகளில் மக்கள் எவ்வாறு பணத்தை கொடுத்து சினிமாவை பார்க்கிறோர்களா அதே போன்று தான் ஒடிடி தளங்களும் என்று கூறியுள்ள அவர், இதற்காக அபர்ணா மீது வழக்கு பதிவு செய்துள்ளது அதிர்ச்சியூட்டுகிறது என்று கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு புதிய விதிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, தாண்டவ் தொடரின் உள்ளடக்கம் ”அநாகரிகமான அவதூறுகள்” என்று கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு, ஒடிடி தளங்களையும், சமூக வலைதளங்களையும் தணிக்கைக்கு உட்படுத்தும், புதிய வழிகாட்டு முறைகளை சமர்பிக்க உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு (மார்ச் 5 ஆம் தேதி) ஒத்திவைத்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்