Aran Sei

உத்திர பிரதேசத்தில் கைதான பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர் – சிஏஏ போராட்டக்காரர்கள் பழிவாங்கப்படுவதாக குற்றச்சாட்டு

பாப்புலர் ஃப்ரண்ட்  அமைப்பின் உறுப்பினரான ரஷீத் அகமதுவை உத்தரபிரதேச காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) கைது  செய்திருப்பதை  வன்மையாக கண்டிக்கிறோம் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, இன்று (மார்ச் 16) அந்த அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அனிஸ் அஹமது அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மும்பையில் வசிக்கும் ரஷீத் , உத்தரபிரதேசத்தில் உள்ள தனது குடும்பத்தினரை சந்தித்து மும்பைக்கு திரும்பியபோது இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். கடந்த இரண்டு நாட்களாக அவரது தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்  புகார் மனு  அளித்திருந்தனர். பயங்கரவாத தடுப்பு படை அவரை இரண்டு நாட்களுக்கு முன்பு காவலில் எடுத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இவர்கள்? எதற்கு சிறையில் உள்ளார்கள்? என்ன குற்றம் செய்தார்கள்?

இன்று (மார்ச் 16)  அவரது குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தை அணுகிய பின்னர், அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர் என்றும் மேலும் அவரை போலி குற்றச்சாட்டுகளுடன் ஊடகங்களுக்கு முன் ஆஜர்படுத்தினர் என்றும் அனிஸ் அஹமது குறிப்பிட்டுள்ளார்.

“அவர் பாப்புலர் ஃப்ரண்டில் உறுப்பினராக உள்ளார். மேலும் அவர் மீது பயங்கரவாத தடுப்பு படை  முன்வைத்த  குற்றச்சாட்டுகள் ஒன்றுக்கும் உதவாதவை.  இது அமைப்புக்கு எதிரான உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் பழிவாங்கும் அரசியலின் ஒரு பகுதியாகும். அமைப்பின் உறுப்பினராக இருப்பதையே பெரும்  குற்றமாகக் கருதி, அமைப்பின்  நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டதற்காக மக்களைத் தண்டிப்பது உத்திரப் பிரதேச அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடு.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், “உ.பி.யில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு, மூன்று பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தற்காலிக குழு உறுப்பினர்கள் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை ஒடுக்குமுறையின்போது நிகழ்ந்த மரணங்கள் குறித்து நீதி விசாரணை கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்ததற்காக மற்றொரு தற்காலிக குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.” என்று அனிஸ் அஹமது நினைவூட்டியுள்ளார்.

‘பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வேண்டும்’ – எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

இந்த வகையான தீங்கிழைக்கும் பழிவாங்கும் அரசியலால் இந்த அமைப்பு பயந்து அடிபணியாது என்பதையும் ஜனநாயக மற்றும் சட்ட வழிமுறைகள் மூலம் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்  என்பதையும் பாப்புலர் ஃப்ரண்ட் தெளிவுபடுத்த விரும்புகிறது என்றும், எங்கள் உறுப்பினர்களை உடனடியாக விடுவித்து, அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்வதை யோகி அரசு நிறுத்த வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட்  கோருகிறது என்றும் அவ்வறிக்கையில் அனிஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்