Aran Sei

கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமை விதிக்கக் கூடாது – போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

ழை நாடுகள் பயன்பெறும் வகையில் கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமை விதிப்பதில் இருந்து விலக்களிக்கும் முடிவுக்கு, போப் பிரான்சிஸ் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

‘ஒரு பாலின இணையர்களுக்குக் குடும்ப உரிமை உள்ளது’ – போப் பிரான்சிஸ்

மேலும், “தடுப்பு மருந்தை உலகளாவிய அளவில் பயன்படுத்துவதற்கு, தடுப்பு மருந்து மீதான அறிவுசார் சொத்துரிமைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்” எனவும் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, கொரோனா நோய்த்தொற்று கிருமி குறித்து ஒருவகையான தேசியவாதம், தடுப்பு மருந்தை உலகளவில் கொடுப்பதை தடுக்கிறது என்றும், மற்றொரு வகை, கொரோனா மருந்துக்கான சந்தை மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றை அன்பின் சட்டங்களுக்கும், மனிதகுலத்தின் ஆரோக்கியத்திற்கும் மேலாக வைப்பது என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

தன்பாலினத்தவர் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வழங்க இயலாது – வாடிகன் தேவாலயம்

கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமையிலிருந்து தற்காலிக விலக்க அளிப்பது தொடர்பாக கடநத் மே 5 மற்றும் 6 தேதிகளில், உலக வர்த்தக கழகத்தில் (WTO) ஆலோசனை நடைபெற்றது.

தடுப்பு மருந்துக்கு காப்புரிமையில் இருந்து விலக்களிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்