ஆண்டிபயாடிக் மருந்து பயன்பாடு குறித்த ஒருங்கிணைந்த நெறிமுறையை தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “அளவிற்கு அதிகமாக அல்லது தேவை இல்லாமல் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகளால், நம் உடம்பில் உள்ள “நோய்க் கிருமி எதிர்ப்பு கட்டமைப்பு” வலுவிழக்கிறது”.என்று தெரிவித்துள்ளார்.
மின்னல் தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது- பூவுலகின் நண்பர்கள்
மேலும், இந்த கட்டமைப்புதான் பல்வேறு கிருமிகளால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நோய்கள் வராமல் தடுக்கிறது எனவும், அளவிற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகளால், அடுத்த 30 ஆண்டுகளில் 1கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் எனவும் ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் அந்த பதிவில் சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் மட்டுமல்லாது, தொழில்முறை இறைச்சி உற்பத்தியிலும் ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாகவும் நோய்க் கிருமி எதிர்ப்பு கட்டமைப்பு வலுவிழப்பதாகவும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா போன்ற நாடுகளில் மூன்றாம் நிலையில் கொடுக்கப்படும் ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் இந்தியாவில் முதல் நிலையிலேயே கொடுக்கப்பட்டு வருவதாகவும், முதல் நிலை மருந்துகள் இந்தியா போன்ற வளர்ந்தநாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவருவதாகவும், மேலும் , போதிய விலை கிடைக்காததால் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அதுகுறித்த ஆய்வுகளை தவிர்த்துவருவதால் புதிதாக மருந்துகள் வெளிவருவது கிடையாதெனவும் சுந்தர்ராஜன் தன் பதிவில் கூறியுள்ளார்.
இதனால், பல கோணங்களிலும் இது சிக்கல் நிலவி வருவதால் ஆண்டிபயாடிக்ஸ் பயன்பாட்டை நெறிமுறை படுத்த வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.