Aran Sei

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை என்றால் ஏழை மக்களுக்கு கல்வி கிடைக்காது – முன்னாள் துணை வேந்தர் ஜவகர் நேசன்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை என்றால் இந்தியாவில் மனித சமூகத்திலிருந்தே கல்வி அகற்றப்பட்டு விடும். ஏழை எளிய மக்களுக்கு கல்வி கிடைக்காது என்று  சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவகர் நேசன் தெரிவித்க்துள்ளார். .

இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 27-வது மாநாடு தாம்பரத்தில் மாவட்டத் தலைவர் ச.ஆனந்த் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவகர் நேசன் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார்.

கர்நாடகா: நிவாரணம் வழங்குவதிலும் மதப் பாகுபாடும் காட்டும் பாஜக – காங்கிரஸ் விமர்சனம்

அப்போது பேசிய அவர், மத்தியில் ஆட்சி புரிபவர்கள் அவர்களது கொள்கைக்கு ஏற்ற மக்களை உருவாக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்கின்றனர். அரசு பள்ளி ஆசிரியர் மாணவர்களை பெற்றோரின் நிலையிலிருந்து கண்டித்து கற்பிக்கின்றனர். ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள், தங்களின் வியாபாரத்தை பெருக்குவதற்காக மாணவர்களிடம் திணித்து கற்பிக்கின்றனர்.

உயர்கல்வியை தொடர்ந்து, பள்ளிக்கல்வி பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கையை அமித் ஷா வெளியிட்டுள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவின் பாரம்பரிய கலாச்சார, கலைகளை கற்பிக்க உள்ளனர். இதனை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்.

எல்கர் பரிஷத் வழக்கு: பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதை கவனத்தில் கொள்ளாத நீதிமன்றங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை என்றால் மனித சமூகத்திலிருந்தே கல்வி அகற்றப்பட்டு விடும். ஏழை எளிய மக்களுக்கு கல்வி கிடைக்காது. மக்களை திரட்டி இவற்றை எதிர்த்து போராடுவதை தீவிரப்படுத்த வேண்டும். அந்த பேரியக்கத்துக்கு பின்னால் கல்வியாளர்கள் இருப்போம். இதற்கான முயற்சிகளை இந்திய மாணவர் சங்கம் எடுக்க வேண்டும் என்று  சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவகர் நேசன் கூறியுள்ளார்.

அம்பேத்கரியமும் பெரியாரியமும் பாஜகவை தோற்கடிக்க முக்கியமானவை – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து

இக்கூட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் ரா.ஜான்சிராணி, துணைத் தலைவர் ப.க.புகழ்ச்செல்வி, இணைச் செயலாளர் நா.குமரன், மாவட்டச் செயலாளர் ரா.பாரதி, மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன்,தாம்பரம் ஒருங்கிணைப்பாளர் வி.தர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source: The hindu tamil

திமுக பாஜக கூட்டணிக்கு சான்ஸே இல்ல I Constandine Interview I DMK I Aransei

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்