Aran Sei

‘ஏழை மக்களே பெரும்பாலும் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்’ – உலக வங்கி அறிக்கை

ணக்கார குடும்பங்களைக் காட்டிலும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களே சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்பதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

விபத்திற்கு பிறகு மருத்துவ பராமரிப்பு தொடங்கி விபத்தால் ஏற்படும் நிதி நெருக்கடி வரை, விபத்தால் ஏற்படும் சமூக-பொருளாதார தாக்கத்தைப் பற்றிய ஆய்வாக இந்த அறிக்கை இருக்கிறது.

விபத்திற்கு பிந்தய காலத்தில் ஏற்படும் மரணம் மற்றும் உடல் இயலாமையின் எண்ணிக்கை, வருமானம் அதிகமாக இருக்கும் குடும்பங்களை விட வருமானம் குறைவாக இருக்கும் குடும்பங்களில் இரு மடங்காக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

குடியரசு தின கொண்டாட்டங்களைக் கட்டாயப்படுத்தியதாகச் செய்தி வெளியிட்ட விவகாரம் – ஊடகவியலாளர்களுக்கு இடைக்கால ஜாமீனை மறுத்த ஜம்மு & காஷ்மீர் நீதிமன்றம்

சாலை விபத்துகள், குடும்பங்களின் மொத்த வருமானத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன, வசதியான குடும்பங்களில் குறையும் வருமானத்தின் அளவு 54 விழுக்காடாக இருக்கும் நிலையில், ஏழ்மையான குடும்பங்களில் இது 75 விழுக்காடாக இருக்கிறது, இது காப்பீட்டுத் திட்டங்களின் மோசமான அணுகுமுறையைக் காட்டுகிறது.

விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கிராம-நகர அளவுகளாகவும் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. விபத்தினால் ஏற்படும் கடுமையான வருமான இழப்புகள், கிராமப்புறங்களில் 56 விழுக்காடாகவும், நகர்புறங்களில் 29.5 விழுக்காடாகவும் இருக்கிறது.

‘விவசாயிகளின் உயிரிழப்புகள் ஆண்டின் சராசரி இறப்பு விகிதத்தோடு சமனில் உள்ளது’ – பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

சாலை விபத்துக் காயங்கள் மற்றும் குறைபாடுகள் : இந்திய சமூதாயத்திற்கு சுமை” எனத் தலைப்பிலான அறிக்கையை உலக வங்கியுடன் இணைந்து சேவ்லைஃப் (SaveLife) அறக்கட்டளை வெளியிட்டது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு பகுதிகளுக்கு ஒன்றின் வீதம் பீகார், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய நான்கு  மாநிலங்களிலிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன.

இதில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டிகளில் சிறந்து விளங்குவதாகவும், ஆனால் பிகார் மற்றும் உத்திரபிரதேச மாநிலங்கள்  பொருளாதார வளர்ச்சி விகிதம், சமூக மற்றும் நிர்வாக முன்னேற்றங்களில் மிகவும் பின்தங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

420 லாரி ஓட்டுநர்கள், 432 அதிக வருமானம் கொண்ட குடும்பங்கள், 1,647 குறைந்த  வருமானம் கொண்ட குடும்பங்கள் உள்ளிட்ட 2,499 நேர்காணல்கள் நடத்தப்பட்டன.

வீட்டு சிறையில் காஷ்மீர் தலைவர்கள்: ‘இதுதான் உங்கள் புதிய மாடல் ஜனநாயகம்’ – உமர் அப்துல்லா விமர்சனம்

காப்பீட்டு திட்டங்களிலும் ஒரு சமச்சீற்ற தன்மை உள்ளது. உயர் வருமானம் கொண்ட குடும்பங்களில், காப்பீடு  வைத்திருப்பவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் (24%), காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து (வாகனம் / மருத்துவம்/ ஆயுள் காப்பீடு),  சுமார் 1,62,562 ரூபாய் இழப்பீடாக பெற்றதாக கூறினர், அதே சமயம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் 14 வழுக்காட்டினர் மட்டுமே சராசரியாக 89,215 ரூபாய் இழப்பீடாக பெற்றுள்ளனர்.

விபத்து நடைபெற்ற சமயத்தில், கணக்கெடுக்கப்பட்ட லாரி ஓட்டுநர்களில், ஐந்தில் ஒருவரிடம் மட்டுமே மருத்துவ காப்பீடு, ஐந்தில் இருவருக்கு மட்டுமே ஆயுள் காப்பீடு இருந்திருக்கிறது. மொத்த லாரி ஓட்டுநர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீடு (Third Party Insurance) பற்றி அறிந்திருக்கவில்லை. ஓட்டுநர்கள் யாரும், மருத்துவமனைகளில் பணிமில்லா சிகிச்சை அல்லது பரிவுத்தொகை திட்டங்களால் பயனடையவில்லை.

சேவ்லைஃப் அறக்கட்டளையின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பியூஷ் திவாரி, “அறிக்கையின் கண்டுபிடிப்புகளின்படி உடனடி மேம்பாடுகள் தேவைப்படும் பகுதிகளாக அவசரகால பராமரிப்பு மற்றும் நெறிமுறைகள், காப்பீடு மற்றும் இழப்பீடு முறைகள் இருக்கின்றன. அபிவிருத்தி முகவர், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அந்தந்த மாநில அரசுகள், தற்போதுள்ள அமைப்பின் முழுமையான கொள்கை மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு, சாலை பாதுகாப்பு குறித்த அவர்களின் செயல்திறனை மேம்படுத்த நிலையான, தீர்வு சார்ந்த, அனைத்தையும் உள்ளடக்கிய நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது” என தெரிவித்தார்

 

ஜக்ரிதி சந்திரா (தி இந்துவில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்