Aran Sei

‘மாநில உரிமைகளில் தலையிடும் புதிய கல்வி கொள்கை நுழையாமலிருக்க துறைசார் நடவடிக்கை’ – உயர்கல்வித்துறை அமைச்சர் உறுதி

புதிய கல்வி கொள்கை என்பது மாநில உரிமைகளின் மீதான தலையீடு என்றும் தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை நுழையாமல் இருக்க துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

இன்று (மே 20), செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, “கடந்த காலங்களில் கல்வித்துறையில் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் நடைப்பெற்ற முறைகேடு தொடர்பாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினேன். சூரப்பா மீதான விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனை கூட்டம் – புறக்கணித்த தமிழக அரசு

மேலும், “புதிய கல்வி கொள்கை என்பது மாநில உரிமைகளின் மீதான தலையீடு. ஆகவேதான், அதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை நுழையாமல் இருக்க துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று உறுதியளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்