Aran Sei

தடுப்பூசியை முதலில் அரசியல்வாதிகள் போட்டால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

க்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முதல் கட்டத்தில் அரசியல்வாதிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் நாராயணசாமி நேற்று (ஜனவரி 16) தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக புதுச்சேரியில் 24 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், முதல் கட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோருக்குப் போடப்படவுள்ளது.

‘தடுப்பூசிகள் நமக்கு’சஞ்சிவி மூலிகை’; பிரமதரின் ஆசிர்வாதம் நமக்கு இருக்கிறது’ – மத்திய அமைச்சர்

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 10 பேரும், அரசு மருத்துவமனையில் 7 பேரும், இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 17 பேரும், கரிக்கலாம்பாக்கம் அரசு சுகாதார மையத்தில் 15 பேரும், ஜிப்மரில் 101 பேரும், காரைக்காலில் 15 பேரும், மாஹேயில் 79 பேரும், ஏனாமில் 30 பேரும் என 274 பேர் மட்டுமே ஊசி போட்டுக்கொண்டதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறையினர் தரப்பில் விசாரித்தபோது, “முதல் நாளில் 800 பேருக்கு ஊசி போட முடிவு செய்யப்பட்டது. முன்கள பணியாளர்கள் வராததால் அந்தந்த மையங்களில் இருந்து சம்பந்தப்பட்டோருக்கு போன் செய்து அழைத்தனர். பலரும் வரவில்லை. சுமார் 3000 பேருக்கு மேல் போன் செய்தோம். முதல் நாளில் சுகாதார முன்கள பணியாளர்கள் அனைவரும் பணியில் இருந்தும் யாரும் வரவில்லை. பலரும் மருந்து வேண்டாம் என்றனர்” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

’முழு ஆய்வு முடியாத கோவேக்ஸின் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டாம்’ – திருமாவளவன் வலியுறுத்தல்

இந்நிலையில், இன்று (ஜனவரி 17) புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “வெளிநாடுகளில் அரசு நிர்வாகத்தினர், அரசியல் கட்சியினர் முதலில் தடுப்பூசி போடுகின்றனர். அதேபோல் இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு முதல்கட்டத்தில் தடுப்பூசி போட அனுமதித்தால் மக்கள் நம்பிக்கையுடன் வருவார்கள் மக்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்