Aran Sei

‘பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்களுக்கு சலுகை வழங்கிய காவலர்கள்’ – 7 ஆயுதப்படை வீர்ர்கள் பணியிடை நீக்கம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 9 பேரும் விதிகளை மீறி, அவர்களது குடும்பத்தினரை சந்தித்தது தொடர்பாக சேலம் ஆயுதப் படைச் சேர்ந்த 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில், அக்டோபர் 21 ஆம் தேதி, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டது. பின்னர் வழக்கின் விசாரணை அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குற்றச்சாப்பட்டவர்கள், அவர்களை அடைத்து வைக்கப்பட்ட சேலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வாகனம் கோவை விமான நிலையம் அருகே வந்தபோது, அங்கே காத்திருந்த அவர்களது உறவினர்கள் வாகனத்தை நிறுத்தி, அவர்களுடன் பேசவிட்டு சென்றுள்ளனர்.

இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற அனுமதியின்றி உறவினர்களை பார்க்க அனுமதிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பபட்டது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களை விதிகளை மீறிக் குடும்பத்தினர் சந்திக்க அனுமத்தித்ததற்காக 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா  உத்தரவிட்டுள்ளார்.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்