Aran Sei

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – போராட்டம் நடத்தச் சென்ற கனிமொழியை தடுத்து நிறுத்திய காவல்துறை

பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் பணம் கேட்டும் மிரட்டியும் வந்த கும்பல், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், காவல்துறையால் கைது செய்யப்பட்டது. தமிழகத்தையே உலுக்கிய இந்த குற்றச்செயல், மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் , வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய செல்போன்களில், பல பெண்களை துன்புறுத்தும் வீடியோக்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அதிமுக மாணவரணி செயலாளர் கைது – விரைந்து தண்டிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்

மேலும், இந்த வழக்கு தொடர்பாக, அதிமுகவின் அம்மா பேரவைச் செயலாளர் ‘பார்’ நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் தனியாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பார் நாகராஜ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். பார் நாகராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த குற்றச்செயலில் அதிமுகவினருக்கு தொடர்பிருப்பதாகவும், குற்றவாளிகளை ஆளும் கட்சி காப்பற்ற முயற்சி செய்வதாகவும், எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

பாலியல் தொந்தரவு செய்யும் பாதிரியார்களைக் காப்பாற்றும் வாடிகன்

இந்த வழக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி, மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. ஆனால் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

`பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தற்கொலை செய்து கொள்வார்’ – முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

இந்நிலையில், கடந்த ஜனவரி 6-ம் தேதி, இந்த வழக்கில் தொடர்புள்ளதாக கூறி, அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளரான அருளானந்தம் என்பவர் சிபிஐயால் திடீரென கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து, பைக் பாபு, ஹெரன் பால் என்ற மேலும் இருவரையும் சிபிஐ கைது செய்தது.

பாலியல் குற்றவாளிகளுக்கு போனஸ் கிடையாது – மத்திய அரசு

பொள்ளாச்சி சம்பவத்தில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ”ஆறேழு வருடங்களாக – பல நூறு பெண்கள் சீரழிக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில், நகர அதிமுக மாணவரணிச் செயலாளர்- கூட்டாளிகளை சிபிஐ கைது செய்திருக்கிறது. குற்றம் புரிந்த தம் கட்சியினரைக் காத்து வருகிறது எடப்பாடி ஆட்சி. குற்றவாளிகள் யாரும் தப்பிவிட CBI அனுமதிக்கக் கூடாது” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு எதிராக போரட்டம் நடத்தவும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை நேரில சந்திக்கவும் சென்ற திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, பொள்ளாச்சிக்கு செல்லும் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து கனிமொழி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ”நான் இபிஎஸ் அரசாங்கத்தால் குறிவைக்கப்பட்டு வழியில் நிறுத்தப்பட்டுள்ளேன். இந்த கொடூரமான குற்றத்தை திட்டமிட்டு மூடிமறைத்தது வெளிவந்துவிடும் என (அதிமுக) மூத்த தலைவர்கள் அச்சமடைந்துள்ளார்களா? அவர்கள் நிரபராதிகள் என்றால் அரசு ஏன் பயப்படுகிறது?” என்று கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்