Aran Sei

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அதிமுக மாணவரணி செயலாளர் கைது – விரைந்து தண்டிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்

டந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலையத்தில், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் பணம் கேட்டும் மிரட்டி வந்த கும்பல் தொடர்பாக, கல்லூரி மாணவி ஒருவர் அவருடைய அண்ணின் உதவியுடன் புகாரளித்தார்.

அந்தப் புகாரில், இணையத்தின் (ஃபேஸ்புக்) மூலம் பழக்கமான ஒரு நபர், அவருடைய நண்பருடன் சேர்ந்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி செல்போனில் படம்பிடித்ததாகவும், அந்த கும்பலுடைய பாலியல் இச்சைகளுக்கு தொடர்ந்து இணங்காவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என அச்சுறுத்தியும், அவர்கள் கேட்கும்போதெல்லாம் பணம் தர வேண்டும் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாலியல் வழக்கைப் பதிவு செய்ய 800 கி.மீ பயணித்த இளம் பெண்

இதையடுத்து அந்த கும்பல் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க கோரி, தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை – காரணம் தேசத்தின் கள்ள மௌனமா?

இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் , வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்பப்பட்டனர். அவர்களுடைய செல்போன்களில், பல பெண்களை துன்புறுத்தும் வீடியோக்கள் இருந்ததாக, விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.

பழங்குடி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவருக்கு காவல் நீட்டிப்பு

பொள்ளாச்சியும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், எத்தனை ஆண்டுகளாக இந்த குற்றச் செயல் நடந்து வருகின்றது எனும் கேள்விகளும் எழுந்தன.

பணியிடத்தில் பாலியல் வன்கொடுமை – பாலியல் தொழிலாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

இதற்கிடையே, இந்த பாலியல் வழக்கு தொடர்பாக, புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கு தொடர்பாக அதிமுகவின் அம்மா பேரவைச் செயலாளர் ‘பார்’ நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் தனியாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பார் நாகராஜ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். பார் நாகராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கும் அதிமுகவிற்கும் தொடர்பிருப்பதாகவும், குற்றவாளிகளை ஆளும் கட்சி காப்பற்ற முயற்சி செய்வதாகவும், எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

பாலியல் தொந்தரவு செய்யும் பாதிரியார்களைக் காப்பாற்றும் வாடிகன்

இந்த வழக்கில் மணிவண்ணனைத் தவிர, கைதுசெய்யப்பட்ட நால்வரும் உடனடியாக ஜாமீனில் வெளியேவந்தனர். பார் நாகராஜ் ஆதரவில்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்றும், பார் நாகராஜுக்குப் பின்னால் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் இருக்கிறார் என்றும் தகவல்கள் வெறி வர ஆரம்பித்தன. அதற்கேற்றாற்போல், பொள்ளாச்சி ஜெயராமனின் மகனோடு கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசும், அவரது நண்பர்களும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாலியல் கொடுமை செய்தவருக்கு ராக்கி கட்ட உத்தரவு – உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

இந்த வழக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி, மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. ஆனால் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு தரப்பிலும் அழுத்தம் வந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

`பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தற்கொலை செய்து கொள்வார்’ – முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

இந்நிலையில், சமீபத்தில் இந்த பாலியல் வழக்கில், கூடுதலாக இரண்டு பெண்கள் சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அதிமுக பிரமுகர் அருளானந்தம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து, பைக் பாபு, ஹெரன் பால் என்ற மேலும் இருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு போனஸ் கிடையாது – மத்திய அரசு

இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மேலும் மூன்று பேர் கைதாகியுள்ளனர். இவர்கள் மூவரையும் பதிணைந்து நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சோனாகச்சி பாலியல் தொழிலாளர்களின் அவல நிலை: கொரோனாவால் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி

இந்த வழக்கில் தற்போது கைதாகியுள்ள அருளானந்தம், அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக இருந்துள்ளார். அவர் கைதானதையடுத்து அதிமுகவின் அடிப்படை பொறுப்பிலிருந்த அவரை நீக்கி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

பொள்ளாச்சி சம்பவத்தில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ”ஆறேழு வருடங்களாக – பல நூறு பெண்கள் சீரழிக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில், நகர அதிமுக மாணவரணிச் செயலாளர்- கூட்டாளிகளை சிபிஐ கைது செய்திருக்கிறது. குற்றம் புரிந்த தம் கட்சியினரைக் காத்து வருகிறது எடப்பாடி ஆட்சி. குற்றவாளிகள் யாரும் தப்பிவிட CBI அனுமதிக்கக் கூடாது” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”அண்ணா அடிக்காதீங்கண்ணா” என்ற சத்தம் இன்னும் இதயத்தை கிழிக்கிறது என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி சீரழித்துவிட்டது என்று கூறியுள்ள ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்துக்கு காரணமான குற்றவாளிகள் விரைந்து தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

திமுக மகளிரணி செயலாளரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ”பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும், மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்துள்ளது உறுதி செய்துள்ளது. எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா?“ என கேள்வியெழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்