Aran Sei

அரசியலோ அரசியல் – நீதிக்கட்சி வரலாறு

தென்னிந்திய நல உரிமை சங்கத்தை(SOUTH INDIAN LIBERAL FEDERATION). 1916ஆம் ஆண்டு சி.நடேசன், டிஎம் நாயர், பி.டி தியாகராயர் ஆகியோர் இணைந்து நிறுவினர். பின்னாளில் இதுவே நீதிக் கட்சியாக உருவெடுத்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மொத்த மக்கள் தொகையில் பிராமணர் அல்லாதோர் சதவீதத்தை விட அதிக அளவில் அரசு பணியில் பிராமணர்கள் இடம்பெற்றிருந்தனர். உரிமையை மீட்டெடுக்க பிராமணரல்லாதோர் சங்கம் உருவாக்கப்பட்டு பின்னாளில் நீதி கட்சியாக உருபெற்றது.

“மாண்டேகு கெம்ஸ்போர்டின்” அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக 1919 இந்திய அரசு சட்டம் இயற்றப்பட்டு மெட்ராஸ் மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்தவகையில் 1920 ஆம் ஆண்டு நீதிக்கட்சி தேர்தலில் போட்டியிட்டது. 1937 வரை மெட்ராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி தான் இருந்தது. 1937 இல் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியைத் தழுவியது நீதிக்கட்சி.

‘இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ – : காளை + விவசாயம் + அப்பாவி கிராமம் + ஊழல் அரசியல்வாதிகள் – ஆய்வே இல்லாத ஒரே பார்முலா!  

ஒருபக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மற்றொரு பக்கம் அரசாங்கம் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் என இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது ஆங்கிலேய அரசு. அப்படி தேர்தலில் பங்கெடுத்த வேட்பாளர்களை, வெற்றி பெற்றவர்களை 1920 டிசம்பர் 6ஆம் தேதி அறிவித்தது. “தராசு” சின்னத்தில் போட்டியிட்ட நீதிக்கட்சி 63 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது.

ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார். பனகல் அரசர் உள்ளாட்சித்துறை பொறுப்புகளை வகித்தார். 1920இல் நீதிக்கட்சி வெற்றி பெற்றபோது ’வெள்ளுடை வேந்தர்’ என அழைக்கப்பட்ட சர் பி.டி தியாகராயர் முதல்வராக பொறுப்பேற்க கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் சுப்பராயலு ரெட்டியார் முதல்வராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில மாதங்களுக்குப் பிறகு சுப்புராயலு காலமானார். அவருக்கு பதிலாக பனகல் அரசர் முதல்வராக பொறுப்பேற்றார்.

நின்று கிடைத்த நீதி – கண்ணகி – முருகேசன் வழக்கின் வரலாறும் தீர்ப்பும்

1923 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணம் இரண்டாவது பொதுத் தேர்தலைச் சந்தித்தது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை, இந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. காரணம் இரட்டை ஆட்சி முறையைக் காங்கிரஸ் ஆதரிக்காமல் மாநில சுயாட்சியை ஆதரித்தது. கவர்னர் போன்ற ஒரு அமைப்பு ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்துவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அதனால் தன் எதிர்ப்பைத் தெரிவிக்க தேர்தலில் பங்கேற்பதை புறக்கணித்தது. இந்த முறை தேர்தல் நடந்த 98 இடங்களில் 44 இடங்களைக் கைப்பற்றியது நீதிக்கட்சி. சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் நீதிக்கட்சி எதிர்த்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர் ஆனாலும் நீதிக் கட்சி வென்றது.

பனகல் அரசர் மீண்டும் முதலமைச்சரானார். ஏ.பி.பாட்ரோ உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். டி என் .சிவஞானம் பிள்ளை கல்வி,பொதுப்பணிகள் வளர்ச்சித் துறைகளில் அமைச்சரானார். அப்போது காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லையே தவிர சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி ஆகியோர் சுயராஜ்ய கட்சி என்ற பெயரில் நீதிக்கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டு 11 இடங்களில் வென்றனர். 3 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சிக்குள் உட்கட்சிபூசல் நிலவியது. பி.டி தியாகராயர் சர்வாதிகாரியை போல நடந்து கொள்கிறார் என கூறி ஒரு பிரிவினர் வெளியேறி தனித்துப் போட்டி யிட்டனர்.

கொரோனா தடுப்பில் சாதித்துவிட்டோமா ? – பிரதமர் மோடியின் உரைக்கு ரவிக்குமார் எம்.பி. எதிர்வினை

1925 ஜூன் 29-ஆம் தேதி நீதி கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான தியாகராயர் மரணமடைந்தார். அவர் நினைவாகத்தான் சென்னையின் ஒரு பகுதியான தியாகராயநகர் பெயர் சூட்டப்பட்டது. தியாகராயர் மறைவுக்குப் பின்னர் நீதிக் கட்சியில் பிளவு ஏற்பட்டது. அதன் விளைவு 1926 ல் நடைபெற்ற மூன்றாவது பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்தது. இந்தத் தேர்தலில் சுயராஜ்ய கட்சியைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று, பாடல்கள் பாடி, ஊர்வலங்கள் நடத்தி வாக்கு சேகரித்தனர். நீதி கட்சி வெற்றி பெற்று விடுவோம் என எண்ணி இருந்தது. திரு. வி. க., மா. பொ. சி., சத்தியமூர்த்தி ஆகியோர் சுயராஜ்ய கட்சிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு அதன் வெற்றிக்குப் பாடுபட்டனர்.

இப்போதுதான் சென்னை மாகாண சபையின் முதல் பெண் உறுப்பினராக “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி’ ஆளுநரால் நியமிக்கப்பட்டார். இவர்தான் இந்தியாவிலேயே சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர். அத்துடன் பேரவை துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகிலேயே சட்டமன்றப் பேரவைத் துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் பெண்மணி முத்துலட்சுமி ரெட்டி தான் என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

சென்னை உயிர்ச்சூழலின் கடைசி நம்பிக்கை – பள்ளிக்கரணை சதுப்புநிலமும் குடிநீர் பிரச்சினையும்

1912ஆம் ஆண்டு முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்றார். பின்னர் எழும்பூர் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தவர். பின்னர் லண்டன் சென்று தாய்-சேய் மருத்துவம் மற்றும் புற்று நோய் பற்றியும் ஆராய்ச்சி செய்தார். அனாதைகள், ஆதரவற்ற பெண்களுக்கான ஒரு இல்லத்தைச் சென்னையில் தொடங்கினார். அதுதான் சென்னை அடையாற்றில் இன்று வரை இயங்கும் “அவ்வை இல்லம்” அதே போன்று புற்றுநோய் மருத்துவமனைக்கு என நிதி திரட்டி 1952ஆம் ஆண்டு சென்னை அடையாற்றில் அன்றைய பிரதமர் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு 1954 தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப் பாடுபட்டவர் முத்துலட்சுமி.

அரசியலோ அரசியல் – நெடுந்தொடர் – 1

கோயில்களில் இறைப்பணி என்ற பெயரில் சிறுமிகளைப் பொட்டு கட்டி விடும் “தேவதாசி முறை” அமலில் இருந்தது. பெண்பிள்ளைகளின் கனவுகளை முளையிலேயே சிதைக்கும் கொடுமைகளில் ஒன்று தேவதாசிமுறை. பார்ப்பனர்கள், கோயில் நிர்வாகிகள், செல்வந்தர்களின் சுயத்தேவைக்காக தேவதாசிகளை பயன்படுத்தினர். இதுதொடர்பாக 1927 நவம்பர் 5ஆம் தேதி சட்ட மேலவையில் ஒரு தனிநபர் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இனி தமிழகத்தில் தேவதாசி முறை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ்காரர்கள் எல்லாம் அதை எதிர்த்தனர். அது புனிதமான பணி கடவுளுக்கே சேவை செய்வது என்று கூறினர். இவற்றுக்கெல்லாம் முத்துலட்சுமி ரெட்டியின் ஒரே பதில் “அப்படியானால் உங்கள் வீட்டு பெண்களை அதில் ஈடுபடுத்தலாமே” அவ்வளவுதான் யாரும் வாய் திறக்கவில்லை. ராஜாஜி போன்றவர்கள் முதல்வராக இருந்தும் அதற்கான சட்டம் கொண்டு வரவில்லை. 1947 இல் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேவதாசிகள் முறை ஒழிப்பு சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. 1926 ஆம் ஆண்டு தேர்தல்….

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்