Aran Sei

பஞ்சாப் முதலமைச்சரின் முதன்மை ஆலோசகர் பதவியிலிருந்து விலகிய பிரஷாந்த் கிஷோர் – அடுத்தாண்டு சட்டபேரவை தேர்தலில் இது எதிரொலிக்குமா?

Image Credits: The Print

டுத்தாண்டு பஞ்சாபில் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸை சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பதவியில் இருந்த தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு (ஐ-பேக்) என்ற பெயரில், தேர்தல் பரப்புரைகள் குறித்த ஆலோசனைகள் தரும் நிறுவனத்தின் தலைவராக பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிறுவனம், 2011 ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடிக்கு பரப்புரை வேலைகளைச் செய்துக்கொடுத்தது. அதைத்தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜகவின் தேர்தல் பரப்புரைகளை முழுமையாக பொறுப்பெடுத்து நடத்திக்கொடுத்து, அக்கட்சி வெற்றி பெற குறிப்பிடத் தகுந்த அளவிற்கும் உதவியது.

அண்மைய சட்டபேரவை தேர்தல்களில், தமிழ்நாட்டில் திமுகவிற்காகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காகவும் தேர்தல் ஆலோசகர் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இருகட்சியும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மேலும், பஞ்சாபில் கேப்டன் அமரீந்தர் சிங், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி போன்றோரின் வெற்றிக்கும்,  பிரஷாந்த் கிஷோர் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 4), பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு பிரஷாந்த் கிஷோர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், “பரபரப்பான பொது வாழ்க்கையில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க முடிவெடுத்துள்ளேன். அதன் காரணமாக, உங்கள் முதன்மை ஆலோசகராக என்னால் பொறுப்புகளை தொடர முடியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

“எனது எதிர்கால திட்டங்கள் குறித்து நான் இன்னும் முடிவு செய்யாததால், தயவுசெய்து இந்த பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த பதவியில் பணியாற்ற என்னை பரிசீலித்ததற்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன்.” என்று அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், காங்கிரஸை சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு பிரஷாந்த் கிஷோரர் தனது முதன்மை ஆலோசகராக நியமித்தார்.

Source; ani

தொடர்புடைய பதிவுகள் :

‘எனக்கு ஓய்வு தேவை நான் விலகுகிறேன்’ : அரசியல் களத்தில் இருந்து விடைபெற்ற பிரஷாந்த் கிஷோர்

மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வியடையும் – பிரஷாந்த் கிஷோர் சவால்

மேற்குவங்கத்தில் பாஜக 100 சீட் பெற்றால் தொழிலில் இருந்து விலக தயார் – பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்