Aran Sei

59.5 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் – அறிக்கை வெளியிட்ட கூகுள் நிறுவனம்

டந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள், யூடியூப் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 21,504 அரசியல் விளம்பரங்கள் பிரசுரமாகி இருப்பதாகவும். அதற்காக மொத்தமாக ரூபாய் 59.50 கோடிகள் செலவிடப்பட்டிருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சியைச் சார்ந்த வேட்பாளர்களின் விளம்பரங்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்ற விளம்பரங்கள். மேலும், அவர்கள் சார்பாக இடம்பெற்ற விளம்பரங்கள்குறித்த தகவல்களைக் கூகுள் நிறுவனம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19, 2019 முதல் ஏப்ரல் 4, 2021 வரையிலான காலத்தில் செய்யப்பட்ட விளம்பரங்கள் தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நீங்கள் அறுவடைக்கு செல்லுங்கள்; நாங்கள் போராடுகிறோம்’ : விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் தொழிற்சங்கங்கள்

அரசியல் விளம்பரங்களுக்கு அதிக தொகை செலவழிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தில் ரூ 24.23 கோடி செலவழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 3.43 கோடி செலவழிக்கப்பட்டு மேற்கு வங்கம் இரண்டாம் இடத்திலும், ரூ. 3.23 கோடி செலவழிக்கப்பட்டு மகாராஷ்டிரா 3 மூன்றாம் இடத்திலும் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைவான தொகை செலவழிக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களில் ரூ. 3.79 லட்சம் லக்சதீப் முதல் இடத்திலும், ரூ 4.05 லட்சம் செலவழிக்கப்பட்டு சிக்கிம், ரூ. 4.11 லட்சம் செலவழிக்கப்பட்டு டாமன் அண்ட் டையூ யூனியன் பிரதேசங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.

திரிபுராவில் பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த தலைமைச் செயலாளர்: நோட்டீஸ் அனுப்பிய இந்திய பிரஸ் கவுன்சில்  

நாட்டிலேயே அதிக தொகைக்கு விளம்பரம் செய்த விளம்பரதாரராகத் தமிழகத்தை சேர்ந்த கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. அக்கட்சி சார்பில் ரூ 18.98 கோடி செலவழக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் மத்திய ஆளும் கட்சியான பாஜகவும், மூன்றாவது இடத்தில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும் இருக்கின்றன. அகில இந்திய அளவில் பாஜக சார்பில் ரூ. 17.03 கோடியும், அதிமுக சார்பில் ரூ. 4.52 கோடி செலவிடப்பட்டுள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊபா சட்டத்தில் கைதான பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன்: 5000 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த காவல்துறை

தேசிய கட்சிகளான  காங்கிரஸ் கட்சி ரூ. 2.93 கோடியும்,  மார்க்சிஸ்ட் கட்சி 10.91 லட்ச ரூபாயும் செலவழித்திருப்பதாக கூகுலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மற்ற கட்சிகளான மக்கள் நீதி மய்யம் ரூ 1.34 லட்சமும், நாம் தமிழர் கட்சி 11.89 லட்ச ரூபாயும் செலவழித்திருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கான வேட்பாளர்களில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பொன்ராஜ் ரூ 33, 500 க்கு விளம்பரம் செய்திருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்