Aran Sei

பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்: வெளிவராத உண்மைகள்

ரசுப் பணி வழங்குவதாகக் கூறி இளம்பெண்ணிடம் ஆதாயமடைந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட கர்நாடகா பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி   பதவி விலகி இருக்கும் நிலையில், இது போன்ற புகார்களில் உண்மை வெளிவருவதில்லை.

இது போன்ற பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட புகார்களில் விசாரணை பெரிதாக நடைபெறுவதில்லை, குற்றம்சாட்டப்படும் ஆணின் அரசியல் வாழ்வில் இப்புகார்கள் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பதே கடந்த கால நிகழ்வுகள்மூலம் தெரிய வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என 6 பேர்மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அதில்,  2010 ஆம் ஆண்டு பாஜகவை சேர்ந்த ஹரடலு ஹலப்பாவும், 2016 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச்.ஒய்.மெதியும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தொழுகையை வழிநடத்த அனுமதி மறுத்த காவல்துறை – காஷ்மீரில் தொடர் அடக்குமுறைக்குள்ளாகும் மிர்வயிஸ் உமர் பரூக்

இது போன்ற புகார்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதோடு, புகார்களில் சிக்கும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் வாழ்வில் தற்காலிக பின்னடைவை சந்தித்து, பின்னர் மீண்டும் இழந்த செல்வாக்கை பெற்று விடுகின்றனர்

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவும், ஆதரவாகவும் அரசியல் அழுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், பாதிப்பக்கப்பட்ட பெண்கள் சாட்சியமளிக்க தவறுவதே இது போன்ற புகார்களில் பின்னடைவை  தருகிறது. ‘பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றால் புகார் இல்லை’ என்று இது போன்ற இருவழக்குகளை விசாரித்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜர்கிஹோலி சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் இதுவரை புகாரளிக்கவில்லை என்பதை அந்தக் காவல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

‘விலைவாசி உயர்வை எதிர்த்து கிளர்ந்தெழுவோம்’ – போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்

கர்நாடகாவின் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணை செயலாளர் கே.எஸ்.விமலா, ”சமீபத்திய மீடூ(MeToo)  இயக்கம் பெண்கள்மீதான ஆண்களின் அடக்குமுறையைப் பாலியல் சுரண்டலை  அம்பலப்படுத்தியது. பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க ஒரு பிரத்யேக சட்டமே காலத்தின் தேவை”எனக் கூறினார்

மூத்த வழக்கறிஞர் பி.டி.வெங்கடேஷ், ”குற்றம் சாட்டப்பட்டதாக மாநில அரசு தெரிவித்திருக்கும் நிலையில், குற்றத்தை விசாரிப்பது மட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவரை பாதுகாப்பதும் அரசின் கடமையாகும். எவ்வாறாயினும், பெரியவர்களிடையே ஒருமித்த பாலியல் உறவு தவறில்லை என்றாலும், அதில் தவறு நிகழ்ந்திருக்கிறதா என்பது விசாரணையின் மூலமே தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளார்.

கே.வி.ஆதித்ய பரத்வாஜ் (தி இந்துவில் வெளியான கட்டுரையின் தமிழாக்க சுருக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்