Aran Sei

நாடாளுமன்ற போராட்டத்திற்கு நிபந்தனை விதித்த காவல்துறை – கோரிக்கையை ஏற்க மறுத்த விவசாய சங்கத்தினர்

நாடாளுமன்றத்தின் முன்பாக  வரும் ஜூலை 22 அன்று முதல்  விவசாயிகள் நடத்தப்போவதாக அறிவித்திருந்த முற்றுகைப்  போராட்டத்தில், குறைந்தளவிலான விவசாயிகளே கலந்து கொள்ள வேண்டுமென்ற காவல்துறையின் கோரிக்கையை  விவசாயிகள் சங்கம் நிராகரித்துள்ளதாக  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டனர் – சர்வதேச பத்திரிகைகள் நடத்திய புலன்விசாரணையில் அம்பலம்

இதுகுறித்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய கிசன் மஸ்தூர் மஹாசங் தலைவர் சிவ குமார் காக்கா,”நாங்கள் ஒருநாளைக்கு 200 பேர் சிங்கும் எல்லையிலிருந்து நாடாளுமன்றை சென்றடைவோம் என்று காவல்துறையிடம் தெரிவித்தோம். இது அமைதி வழியில் நடைபெறும் போராட்டம்,மேலும்,விவசாயிகள் அடையாள பாட்சுகள் கூட அணிந்திருப்பார்கள் என்றும் கூறினோம்” என்று குறிப்பிட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு போராட்டக்காரரின் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவையும் காவல்துறையினரிடம் ஒப்படைப்பட்டுள்ளதாகவும் சிவ குமார் தெரிவித்துள்ளதாக    தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிகளின் நலன் காக்கும் அரசிற்கு மக்கள் தொகை பெருக்கம்: வரமா? சாபமா?

அதுமட்டுமல்லாது, காவல்துறை ஒதுக்கித் தரும் வேறொரு இடத்தில், குறைவான எண்ணிகையில் போராட முடியுமா என காவல்துறை கோரிக்கை வைத்ததை விவசாய சங்கம் நிராகரித்துள்ளதாகவும் ராஷ்ட்ரிய கிசன் மஸ்தூர் மஹாசங் தலைவர் சிவ குமார் காக்கா கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்