Aran Sei

ஊழலில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம்: பொதுமக்களை ஒடுக்கிய காவல்துறை

CREDITS: AP

ஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினுக்கு எதிராகப் போராடிய பொதுமக்களின் கூட்டத்தைக் கலைக்க அந்நாட்டு காவல்துறையினர் தண்ணீர் பீரங்கியைப் பயன்படுத்தியதாகதி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

பெஞ்சமின் நெதன்யாஹூ மீது மோசடி, நம்பிக்கை மீறல், கையூட்டு பெற்றது ஆகிய மூன்று வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தேசிய கொடி அவமதித்ததில் இந்தியா வருத்தமாக இருப்பதாக மோடி பேச்சு – உண்மையில் நடந்தது என்ன?

இதன் காரணமாகப் பிரதமர் பெஞ்சமின் பதவி விலகக்கோரி, அவர் வீடு அமைந்திருக்கும் ஜெருசிலம் பகுதியில் சுமார் ஏழு மாதம் காலமாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அப்பகுதியில் போராடி கொண்டிருந்த மக்களைக் கலைக்க, இஸ்ரேல் நாட்டு காவல்துறையினர் தண்ணீர் பிரங்கிகளை பயன்படுத்தி நீரை அதிவேகத்தில் பீய்ச்சி அவர்களை மொத்தமாக வெளியேற்ற முயற்சித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
தெரிவித்துள்ளது.

விவசாயி உயிரிழப்பு: “நான் குண்டு துளைத்த காயங்களை பார்த்தேன்” – பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தகவல்

நடந்த சம்பவம்குறித்து இஸ்ரேல் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், போராட்டக் களத்தில், ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் அமைத்த தடுப்படுகளை உடைக்க முயன்று, கடுமையாக நடந்து கொண்டதாகவும், அதில் ஒரு காவல் அதிகாரிக்குச் படுகாயம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகப் போராட்டகாரர்களில் பலர் கைது செய்யப்பட்டதாகவும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

மக்கள்மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி இஸ்ரேலில் நடக்கவுள்ள புதிய தேர்தலில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்  என்று இஸ்ரால் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்