Aran Sei

போபாலில் சிறை கைதிகளை என்கவுண்டர் செய்த சிறை நிர்வாகம் – நடவடிக்கை எடுக்காதது குறித்து பதிலளிக்க மனிதஉரிமைகள் ஆணையம் உத்தரவு

த்திய பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறையில், 28 சிறைக்கைதிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் அம்மாநில தலைமை செயலாளர் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2020-ம் ஆண்டில் பெண் ஒடுக்குமுறை தொடர்பாக 80,000 வழக்குகள் – ராஜஸ்தான் அரசிற்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

போபால் மத்திய சிறையில் சிமி அமைப்பைச் சார்ந்த 28 சிறைக்கைதிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அதுகுறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தலைமை செயலாளர் இக்பால் சிங் பைன்ஸ்க்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்சங்க செயல்பாட்டார் தாக்கப்பட்ட புகார் – காவல்துறை விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து மக்கள் குடியுரிமை கழகம், அப்பாவிகள் இணையம்(innocence network) , இந்திய முஸ்லீம் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்பைச் சேர்ந்த மனிதஉரிமை செயல்பாட்டாளர்கள் சிறைத்துறை கண்காணிப்பாளரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தஅக்டோபர் 2016 அன்று தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளான கைதிகளில் 8 பேர் சிறையிலிருந்து தப்பித்ததாக கூறி அவர்களைக் காவல்துறை சுட்டு கொன்றனர்.

குண்டு வெடிப்பு வழக்கில் கைதான பாஜக எம்.பி காவல்துறையால் தாக்கப்பட்டாரா? – மஹாராஷ்ட்ரா காவல்துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இந்நிலையில், இதுகுறித்து மார்ச் 2017 ஆய்வு மேற்கொண்ட தேசிய மனிதஉரிமைகள் ஆணையம்  28 கைதிகள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்