Aran Sei

4 இஸ்லாமியர்களை காவல்நிலையத்தில் சித்தரவதை செய்த காவல்துறை – நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

நான்கு இஸ்லாமியர்களை காவல்நிலையத்தில் சித்ரவதை செய்த 6 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சாகுல் ஹமீது மதுரை ஆரப்பாளையத்தில் துணி தைக்கும் கடை நடத்தி வருகிறார். அவரைச் சந்திக்க அவரின் நண்பர் ராஜாமொய்தீன் வந்துள்ளார். அவ்விருவரையும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பசுவின் தலையை வீசி சென்றதாக கைது செய்துள்ளது காவல்துறை. ரபீக் ராஜாவையும் சாயின்ஷாவையும் இதே காரணத்திற்காக காவல்துறை கைது செய்துள்ளது.

பசுவின் தலை எங்கிருந்தது எடுக்கப்பட்டது என்று காவல்துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு தெரியாது என்றும் இதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளனர்.

போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக தரவுகள் இல்லை – ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் தகவல்

நால்வரையும் செல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு தண்ணீர்,உணவு தராமல் சிறப்பு படை உதவி ஆய்வாளர்கள் பார்த்திபன், வெங்கட்ராமன் உள்ளிட்ட 6 பேர் சித்தரவதை செய்ததாக புகார் எழுந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிபதி முன் ஆஜர் படுத்தியுள்ளனர் காவல்துறை. அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காவல்நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு நீதிவேண்டி பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில் மனித உரிமை அமைப்பு விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் முடிவில் நான்கு இஸ்லாமியர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டது உண்மை என்று அறியவந்துள்ளது.

‘பாஜகவின் சர்வாதிகார ஆட்சியில் உத்தரபிரதேச மாநிலம் அச்சத்தில் வாழ்கிறது’ – சத்தீஸ்கர் முதலமைச்சர் கருத்து

பாதிக்கப்பட்ட நால்வருக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை. ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறையினர் மேல் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்