Aran Sei

இந்துப் பெண்ணைக் காதலித்த இஸ்லாமியர் – இந்துத்துவவாதிகளால் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை சந்தேகம்

ர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் தண்டவாளம் அருகே இறந்த நிலையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது இந்துத்துவவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கொலையாக இருக்குமோ என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தண்டவாளத்தில் இறந்த நிலையில் கிடந்தது அர்பாஸ் முல்லா (25) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.  கடந்த 29-ம் தேதி பெலகாவியை அடுத்துள்ள கானாப்புரா அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்தது. ரயில்வே காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது, அர்பாஸ் முல்லாவின் உடல் தான் என அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர். இதுகுறித்து பெலகாவி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை அமைக்க அனுமதி வழங்கிய ஒன்றிய அரசு – திருமாவளவன் கண்டனம்

இதனிடையே அர்பாஸ் முல்லாவின் தாயார் ஃபாத்திமா நேற்று முன்தினம் காவல்நிலையத்தில் அளித்தப் புகாரில், “எனது மகன் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தார். இதை அறிந்த இந்துத்துவா அமைப்பின் நிர்வாகிகள் சிலர், காதலை கைவிடுமாறு அவரை மிரட்டினர். அதற்கு என் மகன் ஒப்புக் கொள்ளாததால் திட்டமிட்டு அவரைக் கொலை செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் உள்ள இந்துத்துவா அமைப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்