Aran Sei

எங்களை தாக்கி சொத்துக்களை அழித்த குற்றவாளியை காவல்துறை காப்பாற்றுகிறது – மத்திய பிரதேச இஸ்லாமியர்கள் குற்றசாட்டு

த்தியபிரதேசத்தில் உள்ள கந்துவா மாவட்டத்தில் 2 இஸ்லாமியக் குடும்பங்களின் சொத்துக்களுக்குத் தீ வைத்து, அவர்களைத் தாக்கிய குற்றவாளியான பூந்தி உபாத்யாய் என்பவரைப் பாதுகாக்க எளிதில் பிணை கிடைக்கக் கூடிய மிகச் சாதாரண வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளதாக இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஜனவரி 20 அன்று இரவு, கந்துவா மாவட்டத்தில் உள்ள கோடியா ஹனுமான் மந்திர் பகுதியில் வாழும் சலீம் பேக் என்பவரின் ஆட்டோரிக்ஷாவும், ஷௌகத் அலி என்பவரின் வீடும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. கோடியா ஹனுமான் மந்திர் பகுதி இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். இங்கு நான்கைந்து இஸ்லாமியக் குடும்பங்கள் மட்டும் வாழ்ந்து வருகின்றன.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள பூந்தி உபாத்யாய் என்பவர் 2022 ஜனவரி 5 அன்று ஷௌகத் அலி என்ற பெயிண்டரைத் தாக்கிக் கொலை முயற்சி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 19 அன்று அவர் பிணை பெற்றதோடு அங்குள்ள உள்ளூர் இஸ்லாமியர்களை அங்கிருந்து வெளியேறும்படி மிரட்டியதாக கந்துவா காவல் கண்காணிப்பாளர் விவேக் சிங் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை ஒடுக்குவதில் பாஜக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்துள்ளன – ஆலன் ஷுஐப் 

2022 ஜனவரி 5 அன்று கந்த்வா மாவட்டத்தின் கோட்வாலி காவல்துறை உபாத்யாய்க்கு எதிராக 6 சட்டப்பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

இரண்டு இஸ்லாமியக் குடும்பங்களும் பலமுறை புகார் அளித்தும், வகுப்புவாதம் தொடர்பான பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யக் காவல்துறை மறுத்துவிட்டதாக அங்குள்ள இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 5, 2022 அன்று, ஷௌக்கத் அலியின் வீட்டிற்கு அருகில் நின்றுகொண்டு உபாத்யாய் தனது நண்பர்களுடன் பீர் குடித்துக்கொண்டிருந்தபோது, ​​இஸ்லாமியச் சமூகத்திற்கு எதிராக அநாகரீகமான கருத்துக்களைப் பேசிக் கொண்டிருந்ததாகவும், இதற்கு ஷௌக்கத் அலி எதிர்ப்பு தெரிவித்ததால், உபாத்யாய் அவரை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார்.

பீர் பாட்டில் தாக்குதலுக்குப் பிறகு ஷௌக்கத் அலி 4 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். அதன்பின் உபாத்யாய் ஆட்களின் அடுத்தடுத்த தாக்குதலுக்குப் பயந்து ஷௌக்கத் அலியின் குடும்பம் இந்தூருக்கு மாறியுள்ளது.

“எங்கள் வாய்வழி புகார்கள் அனைத்திலும், நாங்கள் இஸ்லாமியர்கள் என்பதால்தான் தாக்கப்பட்டோம் என்று கோடிட்டுக் காட்டினோம். எங்கள் வீட்டுக்குத் தீ வைப்பதற்கு முன், குரானின் பக்கங்களை அவர்கள் கிழித்து எறிந்ததாகக் கூட நான் காவல்துறையிடம் சொல்லியிருக்கிறேன். சம்பவம் நடந்து ஒரு நாளுக்குப் பிறகு அந்தப் பக்கங்களை நான் கண்டுபிடித்தேன்,” என்று சௌக்கத் அலியின் மனைவி அகீலா குற்றம் சாட்டியுள்ளார்.

“ஜனவரி 20 அன்று, பிணையில் வெளியே வந்த பூந்தி உபாத்யாய் எங்கள் வீட்டிற்கு வந்து, எங்கள் இரு குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும், இல்லையெனில் அவர்களை உயிருடன் எரித்துவிடுவதாக மிரட்டியுள்ளார், மேலும் இது இந்து மக்கள் வாழும் காலணி, இங்கு இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது என்று உபாத்யாய் மிரட்டியதாக சலீம் பேக் தி வயரிடம் பேசியுள்ளார்.

2021 பாஜக ஆட்சியில் 4 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு, 2 பணக்காரர்கள் மட்டுமே வளர்ந்துள்ளார்கள் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உபாத்யாய் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, அல்ப்சங்க்யாக் விகாஸ் கமிட்டியின் சார்பாக இஸ்லாமியர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை வழங்கினர்.

“காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த விதம், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காக்க முயல்வது போல் தெரிகிறது, தங்கள் மத நம்பிக்கையின் காரணமாகத் தாக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை வாய்வழி புகார் அளித்தபோதிலும் காவல்துறை, அதைக் குறிப்பிடவில்லை என்று அல்ப்சங்க்யாக் விகாஸ் கமிட்டியின் சோஹைல் கான் கூறியுள்ளார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்