Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: தொடங்கியது விசாரணை – அமைச்சரின் தலையீடு இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

ட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை குறித்து விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவானது, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்களையும் வன்முறை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, அக்குற்றச் செயலை நடித்துக்காட்ட வைத்து பதிவு செய்துள்ளது.

நேற்று (அக்டோபர் 14), பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், குற்றம் சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா, அவரது நெருங்கிய நண்பரான அங்கித் தாஸ், அவரின் பாதுகாவலர் லத்தீப் மற்றும் டிரைவர் சேகர் பாரதி ஆகியோரை குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற சிறப்பு விசாரணை குழு, காவல்துறையின் வாகனங்களைப் பயன்படுத்தி குற்றச்செயலை நடித்துக்காட்ட வைத்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கின் தற்போதைய நிலை குறித்து பேசியுள்ள பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகாயத், “சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையில் விவசாயிகளுக்கு திருப்தி இல்லை. முக்கிய குற்றவாளியான அமைச்சரின் மகனை  சிவப்பு கம்பள மரியாதை கொடுப்பது போல, கைது செய்த விதமானது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடையே கோபத்தை தூண்டியுள்ளது.  சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா தலையீடு உள்ளது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்