Aran Sei

தலித்துகளின் திருமணத்தின் போது நடக்கும் வன்முறை சம்பவங்கள் – முன்னெச்சரிக்க நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ள குஜராத் அரசு

குஜராத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நரேஷ் வாங்கரின் திருமணத்தின் பாதுகாப்பிற்காக 67 காவல்துறையினரை குஜராத் அரசு நியமித்திருப்பதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில் அந்தப் பகுதியில் நடைபெற்ற தலித்துகளின் திருமணத்தில் வன்முறை நிகழ்ந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை மேற்கொண்டிருப்பதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”ஒரு துணை கண்காணிப்பாளர், 5 துணை ஆய்வாளர்கள், ஒரு ஆய்வாளர் மற்றும் 60 காவலர்களை இந்தப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்” என சபர்கந்தா மாவட்டத்தின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தினேஷ் சவுகான் தெரிவித்திருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூறாவது நாளில் விவசாயிகள் போராட்டம்: ‘ராணுவ வீரர்களின் தந்தைகளுக்கு ஆணிக்கம்பளம் விரிக்கும் மத்திய அரசு’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

800 பேரை  மக்கள் தொகையாக கொண்ட பாஜ்புரா கிராமத்தின் முக்கிய சந்தை உள்ளிட்ட பகுதிகள் வழியாக திருமணம் ஊர்வலம் செல்லவிருப்பதால், “நான் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டதை அடுத்து, வழங்கப்பட்டுள்ளது” என நரேஷ் வாங்கர், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா யிடம் தெரிவித்தார்.

திருமண ஊர்வலத்தின்போது தலித் மணமகன் குதிரை மீறி ஏறி ஊர்வலம் வருவதற்கு, எதிர்ப்பு தெரிவித்து ஆதிக்க சாதியினர், வன்முறையில் ஈடுபடும் நிகழ்வுகள் அந்தப் பகுதியில் அதிகமாக நிகழ்ந்து வருகிறது.

2019 ஆம் ஆண்டில் மட்டும், சபர்கந்தா மாவட்டத்தில்,  தலித்துகளின் திருமணத்தின்போது 3 வன்முறை சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன.

வருமான வரித்துறை சோதனை தொடர்பாக நடிகை டாப்ஸியின் ட்விட்டர் பதிவு – விமர்சனம் செய்த நடிகை கங்கணா ரணாவத்

காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்ற வாங்கரின் கோரிக்கையால், அதிர்ச்சியடைந்திருப்பதாக கூறிய பாஜ்புரா கிராம தலைவர் கல்பேஷ் பட்டேல், “இது ஒரு எளிய திருமண ஊர்வலம். இதற்குக் கிராமத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா  பதிவிட்டுள்ளது.

பால் பண்ணையில் பால் எடுக்கச் செல்லும் கிராம மக்களின் அவசரத்தை கருத்தில் கொண்டு, மாலை 3 மணியிலிருந்து 6 மணிக்குள் ஊர்வலத்தை நடத்திக்க்கொண்டால் நன்றாக இருக்கும் என கல்பேஷ் கூறியதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜ்புரா கிராமத்தில் கடந்த காலங்களில் தலித்துகளின் திருமணத்தின்போது சாதிய மோதல் ஏற்பட்டதில்லை என காவல்துறை அதிகாரி தெரிவித்திருப்பதாக, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்