Aran Sei

தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு – ஊடகவியலாளர் உள்ளிட்ட 8 பேரை உபா சட்டத்தில் கைது செய்த காவல்துறை

தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக கூறி புகைப்பட ஊடகவியலாளர் மனன் குல்சார் தாஸ் உள்ளிட்ட எட்டு பேரைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ்  காஷ்மீர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 பி (கிரிமினல் சதி), 121 ஏ (குற்றங்கள் செய்வதற்கான சதி), 122 (இந்திய அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் வகையில் ஆயுதங்களை சேகரித்தல்), 123 (போருக்கு ரகசியமாக திட்டமிட்டு செயல்படுதல்), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

24 வயதான மனன் குல்சார் தி கார்டியன் உள்ளிட்ட பல ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.

‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கெமிக்கல் மண்டலமா?’- காவிரி டெல்டாவை சிதைக்கக் கூடாதென ராமதாஸ் வலியுறுத்தல்

”நாங்கள் செய்திகளில் பார்த்துத்தான் மனன் கைது ஆனாது குறித்து அறிந்துகொண்டோம். கைது செய்யப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்டது, அவர் உயிருடன் உள்ளாரா என்று தெரியவில்லை. அவர் என்.ஐ.ஏ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, புது டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்” என மனன் குல்சாரின் தந்தை குல்சார் அகமது தார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கல்லூரி மாணவரான மனனின் தம்பி ஹனான் குல்சார் தார் இந்த மாதத்தின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்குத் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்

கைது நடவடிக்கைக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளனர்.

லஷ்கர்-இ-தைபா, ஜைஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், அல் பாதர் ஆகிய தீவிரவாத அமைப்புகளின் தொடர்புடைய வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்