Aran Sei

கும்பமேளாவில் பங்கேற்று கொரோனா சிகிச்சை பெற்றுவந்தோர் தப்பியோட்டம் : 20 பேர் மீது வழக்குகள் பதிந்த காவல்துறை

த்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டம் முனி கி ரெட்டி பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய 20 கொரோனா தொற்று நோயாளிகள் மீது அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கும்பமேளாவிற்கு வருகை தந்த இந்த 20 பேரும், கொரோனா சோதனையில் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக பேசிய காவல்துறை தலைவர் சஞ்சய் குன்ஜால்,“கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியது, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க முயன்றது போன்ற குற்றங்களின் கீழ் தப்பியோடிய 20 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களைத் தேடுவதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் கும்பமேளா அவசியமா? – துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்திரா கேள்வி

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரத்தில் (ஏப்ரல் 11-17) மட்டும் 13,924 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் நடக்கும் திருமணங்கள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஹரித்வாரில் நடந்து வரும் கும்பமேளாவிற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்