Aran Sei

லக்கிம்பூர் வன்முறை – ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் காவல்துறை விசாரிக்க நீதிபதி உத்தரவு

ன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதால், பாஜகவின்  மூத்த தலைவர்கள் அமைச்சருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தனது மகன் குற்றத்தில் ஈடுபட்ட்தற்கான எந்த ஆதாரமும் இல்லை இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அஜய் மிஸ்ரா அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவதால் காவல்துறை விசாரணையின் போக்குகளைக் கட்சி கண்காணிப்பதாக பாஜகவைச் சேர்ந்தவர்கள் இந்தியன் எக்ஸ்ப்பிரஸிடம் தெரிவித்துள்னர்.  காவல்துறை விசாரணையை முடித்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுப்பார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

‘ஏர் இந்தியா தனியாருக்கு விற்கப்பட்டது அரசின் அர்ப்பணிப்பை காட்டுகிறது’- பிரதமர் மோடி

அக்டோபர் 3 ஆம் தேதி, உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்மீது கார் ஏற்றியது தொடர்பாக விவசாயிகள் அளித்த புகாரின் பெயரில் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், 4 விவசாயிகள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அக்டோபர் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகமாறு ஆஷிஷ் மிஸ்ராவிற்கு அனுப்பப்பட்டிருந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 7 ஆம் தேதி இரண்டு பேரை உத்திரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆஷிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டை மறுக்கும் அவரது தந்தை அஜய் மிஸ்ரா, “சம்பவ இடத்தில் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. ஒருவேளை ஆஷிஷ் மிஸ்ரா அங்கிருந்தால் அவரைக் கொன்றிருப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

ஹரியானா அரசு ஊழியர்களுக்கு ஆர்.எஸ்.எஸில் சேர விதிக்கப்பட்டிருந்த தடை – 54 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கி உத்தரவிட்டுள்ள மாநில அரசு

இந்தச் சம்பவத்தின்போது கலவரம் விளைவிக்கும் சக்திகள், விவசாயிகள் போர்வையில் பாஜகவினரை தாக்கியுள்ளனர் என அமைச்சர் அஜய் மிஸ்ரா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நேற்று(அக்-11), நீதிமன்ற நடவடிக்கைகள் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நடத்தப்பட்டன, காவல்துறையினர் சாட்சிகளைச் சேகரிக்க மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை மேலும் விசாரிக்கத் தங்களுக்கு காவல் தேவை என்று கூறியுள்ளனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு, ஆஷிஷ் மிஸ்ராவை மூன்று நாள் விசாரணைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்கள் விசாரணைக்குத் தொந்தரவு செய்யாமல் செயல்முறையை (விசாரணை) தொலைவிலிருந்து பார்க்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது” என்று வழக்கறிஞர் எஸ்பி யாதவ் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்