Aran Sei

விவசாயிகள் போராட்டத்தை அனைத்து வகையிலும் ஒடுக்கும் காவல்துறை – பிப்ரவரி 6 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடவுள்ள விவசாயிகள் சங்கம்

விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்கும் விதமாக, சிங்கு எல்லையிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில், சிமெண்ட் தடுப்புகள் அமைப்பது, அதற்கு நடுவே ஆணி பதிக்கும் பணிகள் காவல்துறை கண்காணிப்பில் நடைபெற்று வருவதாகத் தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நெடுஞ்சாலையின் மற்றொரு பகுதியான, டெல்லி ஹரியானா எல்லையில், தற்காலிக சிமெண்ட் சுவர்கள்மூலம் தடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை

சாலையின் இரு தடுப்புகளுக்கு இடையே  குறுக்குவெட்டில் குழி பறித்த தொழிலாளி, ”ஒரு தடுப்பு நேற்று உருவாக்கப்பட்டது. இந்தத் தடுப்புகளுக்கு இடையே சிமெண்ட் ஊற்றப்பட்டு, தற்காலிக சுவர் உருவாக்கப்படும்” என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Photo Credit : thewire.in

திங்களன்று (பிப்ரவரி 1) சிங்கு எல்லையின் டெல்லி பகுதியில் போராட்டக்காரர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததாகவும், ஆனால் ஹரியானா பகுதியில் அதிக போராட்டக்காரர்கள் கூடியிருந்ததோடு, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும், குடியரசு தின நிகழ்விற்கு எதிரிப்பு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பியதாக தி வயர் கூறியுள்ளது.

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட் – திருமாவளவன் கண்டனம்

கடந்த சில தினங்களாகப் போராட்ட களம் அருகே குவிக்கப்பட்டிருந்த துணை ராணுவ படையினர், விரைவு அதிரடி படையினர், மத்திய ரிசர்வு காவல் படையினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் போராட்ட களத்திற்கு ஒரு மைலுக்கு அப்பால் அணிவகுக்கப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் டெல்லி வருவதை தடுக்க, ஒரு ரயில் இடையில் நிறுத்தபட்டு இருப்பதோடு, மற்றொரு ரயில் திருப்பிவிடப்பட்டு இருப்பதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

’தேசியவாத பாடம் நமக்கு; தேசத்தின் வளம் தனியாருக்கு’ – பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி

மும்பை செல்லும் ஒரு ரயில் ரோஹ்தக்கிலிருந்து, ரேவாரி வழியாகத் திருப்பிவிடப்பட்டு இருந்த நிலையில், ”செயல்பாட்டு காரணங்களால் ரயில் திருப்பி விடப்பட்டதது” என வடக்கு ரயில் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தின் அடுத்த பகுதியாகப் பிப்ரவரி 6 ஆம் தேதி, சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும், மதியம் 12 முதல் 3 மணிவரை சாலைகள் தடுக்கப்படும் எனவும் சிங்கு எல்லையின் ஹரியானா பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்தாகத் தி வயர் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்