Aran Sei

“காவல்துறையினர் என்னை கடுமையாக தாக்கினர்” – பத்திரிகையாளர் மந்தீப் புனியா குற்றச்சாட்டு

credits : the wire

னவரி 30ஆம் தேதி, டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் மந்தீப் புனியா,  தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறையிலிருந்து வெளி வந்துள்ள மந்திப் புனியா தன்னுடைய சிறை அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தி வயர் இணையதளத்திடம் அவர் கூறிய தகவல்களின் ஒரு பகுதி:

”சிங்கு எல்லையை கடக்க முயன்ற புலம்பெயர் தொழிலாளர்களிடத்தில் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதை நானும் தர்மேந்தரும் படம் பிடிக்க தொடங்கினோம். இதை பார்த்த காவலர் தர்மேந்தரை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றார். நான் அந்த காவலரிடம் ஒரு பத்திரிகையாளரிடம் இது போன்று நடந்து கொள்ள கூடாது என வாதிட்டேன்.

அதற்குள் காவலர்கள் பலர் எங்களை சுற்றிவளைத்து எங்களை கடுமையாக தாக்க தொடங்கினர். பின்னர் எங்களை ஒரு கூடாரத்திற்குள் இழுத்துச் சென்று இன்னும் அதிகமாக அடித்தனர். எங்களை அடிக்கும்பொழுது காவலர் ஒருவர் “நீங்க பத்திரிகையாளர் ஆகணுமா? நாங்க உங்களை பத்திரிகையாளராக மாத்துறோம்” என்று கூறினார். எங்களை கடுமையாக தாக்கிய காவல்துறை, வசைச் சொற்களால் எங்களை இழிவுப்படுத்தியது.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு கூடுதல் துணை ஆணையர் ஜதிந்தர் மீனா வந்தார். ஒரு சிறிய தவறு நடந்து விட்டது, மருத்துவ முதலுதவிகள் செய்து கொண்ட பின்னர் விடுவித்துவிடுகிறோம் என அவர் கூறினார்.

காவல்துறை அறிவுறுத்தியப்படி மருத்துவ பரிசோதனை செய்து கொண்டால் எங்களை சிறையில் அடைத்துவிடுவார்கள் என்பதை உணர்ந்த நாங்கள், சுயமாக மருத்துவ பரிசோதனையை செய்து கொள்வதாக கூறினோம். இதற்கு காவல் ஆணையர் மீனா ஒப்புக்கொண்டார். அன்று காலை தான் அலுவல் விஷயமாக நான் கூடுதல் துணை ஆணையர் ஜதிந்தர் மீனாவை சந்தித்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர், நாங்கள் அங்கிருந்து ஒரு பழைய கட்டிடத்திற்கு (அது காவல்நிலையமா இல்லையா என என்னால் சரியாக நினைவுப்படுத்த முடியவில்லை) அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள், நான் குளிருக்காக அணிந்திருந்த என்னுடைய மேலாடையை (Winter Jacket) கழட்டி, அந்த அறையில் உள்ள மின்விசிறியை (Fan) போட்டனர். அவர்களுக்குள் மிகவும் அறுவெறுக்க வகையில் பேசிய காவல்துறையினர், ”இவனை ஒரு விபச்சார விடுதியில் இருந்து கைது செய்ததாக காட்டி விடுவோம்” என்று கூறினர்.

அவர்கள் ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கும் போதே, வேகமாக ஒடி வந்த காவலர் (Constable) ஒருவர் என்னை கைது செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டதாக கூறினார். இதையடுத்து அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவரும், உடனடியாக அறையைவிட்டு வெளியே சென்று 30 நிமிடங்களுக்கு பின்னர் திரும்பி வந்தனர்.

பின்னர், அங்கிருந்து நான் அம்பேத்கர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அதிகாலை 1.40 மணியளவில் மருத்துவ அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மருத்துவரிடத்தில், நான் காவல்துறை அதிகாரிகளுடன் சண்டையிட்டதாக கூறினர். ஆனால் மருத்துவர் நான் கைது செய்யப்படும் வீடியோவை பார்த்துவிட்டதாக கூறி அவர்களை அறையிலிருந்து வெளியே அனுப்பினார்.

அதன் பின்னர் காலை 3.30 மணியளவில் நான் சமய்பூர் பல்தி காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டேன். நான் பலமுறை கேட்டு பார்த்தும் என் நண்பர்கள், என் பத்திரிகையின் ஆசிரியர், மனைவி என யாரிடமும் பேச அவர்கள் அனுமதி தரவில்லை”

நன்றி: www.thewire.in

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்