Aran Sei

மதுரையில் சாதி வன்மத்தோடு காவல்துறையினர் தாக்கியதாக புகார் – வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி போராட்டம்

துரை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த  திருப்பதி என்பவரைச் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அழைத்துச் சென்று சாதிய வன்மம் கொண்டு  தாக்கியதால் காவல்துறையினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவரின் உடன்பிறந்த சகோதரர் தமிழ்ப்பதி அரண்செய்யிடம் தெரிவித்தார்.

மதுரை ராஜாஜி மருத்துவமனை வார்டில் கொரோனா தடுப்பு தற்காலிமாகப் பணியாளராக வேலை செய்பவர் திருப்பதி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், பகுதி நேரமாக ’டோல்’ இசைக்கருவியை வாசிப்பவராகவும் இருக்கிறார்.

‘அந்தோலன்ஜீவி’கள் (பிழைப்புப் போராளிகள்): 1974 ல் அரசுக்கு எதிராகப் போராடிய போது

கடந்த, பிப்ரவரி 8 ஆம் தேதி மாலை தனது நண்பர்கள் மூவருடன் பாண்டிகோவிலில் விழாவிற்கு டோல் அடிக்கும் பணி முடிந்து காரில் வீடு நோக்கி வந்துள்ளனர், அப்போது மதுரை சுப்ரமணியபுரம் பகுதியில் அவர்களை இரண்டு சீருடை அணிந்த காவல்துறையினர் இரண்டு சீருடை அணியாத காவலர்கள் அவர்களின் காரை வழிமறித்ததாகவும், அவர்கள் தொடக்கத்திலேயே மரியாதை இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை விசாரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவரின் சகோதரர் தமிழ்பதி அரண்செய்யிடம் தெரிவித்தார். அவர் தம்பியும் அவரின் நண்பர்களும் மரியாதையாகப் பேசச் சொல்லிக் கேட்டதாகவும், அதற்குக் காவலர்கள் ‘நீ எந்தப் பகுதி(ஏரியா)’ என்று விசாரித்ததாகவும் அதற்கு அவர்கள் அருந்த்தியர் காலனியில் வசிப்பதாகக் கூறிய பின்பே  மதுரை B6 காவல் நிலையத்திற்கு அழத்துச் சென்று காவலர்கள் அதிமாக அடிக்கத் தொடங்கியதாகவும் கூறினார்.

ஏன் எங்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் மேலும் நான்கு காவலர்கள் ’என்னடா ஓவரா வாய் பேசுற’ என்று லத்தியால் சரமாரியாக அடிக்கத் தொடங்கியதாகவும் தமிழ்ப்பதி அரண்செய்யிடம் தெரிவித்தார்.

‘உங்களால்தான் நாங்கள் இருக்கிறோம்’ – விவசாயிகள் போராட்டக்களத்தில் மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி

திருப்பதியின்  தாடை பகுதியில் மாறி மாறி தனது பூட்ஸ் கால்களால் எட்டி உதைத்தும் முதுகு, இடுப்பு, கழுத்து பகுதிகளில் மாறி மாறி காலால் உதைத்தும் லத்தியால் அடித்துள்ளதாகவும்அவர் கூறினார்.

இரத்தப்போக்கு அதிகமாக இருந்த்தால்அவர்களை வீட்டுக்குக் காவலர்கள் அனுப்பியுள்ளனர்.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருப்பதிக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் இடது தாடை எலும்பு, மூக்கு எலும்பு உடைந்துவிட்டதாகவும், மேலும் இடது புற தாடையில் உள்ள பற்கள் முழுவதும் கடுமையாகச் சேதமடைந்துவிட்டதாகவும், காது பகுதி, கழுத்து பகுதி, முதுகுப் பகுதி, இடுப்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் சேதமடைந்துவிட்டது என்றும் தெரிவித்த அவர், திருப்பதியின் மார்பு பகுதியில் வீக்கங்கள் இருப்பதாகவும், தாடை எலும்புகள் உடைக்கபட்டிருப்பதால் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறியதாக தமிழ்ப்பதி அரண்செய்யிடம் தகவல் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பலியான உயிர்கள்: கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வது எப்போது? – கௌரவ் விவேக் பட்நாகர்

“காவல் துறையின் அராஜக செயலுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” என்றும் தெரிவித்தார். தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலைச் சிறுத்தகள் கட்சியைச் சேர்ந்த விக்ரமன், நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் இயக்குநர் பா.ரஞ்சித், இந்திய இளைஞர் சங்கம் (DYFI), கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், உள்ளூர் அமைப்புகளும் அரசியல், கட்சிகளும் நீதி கேட்டுப் போராட்ட்த்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்களை இடம் மாற்றம் செய்திருப்பதாகத் தெரிவித்த தமிழ்ப்பதி, ’இந்த நடவடிக்கை போதாது, சாதி மனோபாவத்தோடு தாக்கிய காவலர்களை வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட்த்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவரின் சகோதரர் தமிழ்ப்பதி அரண்செய் யிடம் தெரிவித்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்