Aran Sei

இஸ்லாமியப் பெண்களை இழிவுபடுத்துவதற்காக செயலியை உருவாக்கிய இளைஞர் கைது – காவல்துறை விசாரணை

சுல்லி டீல்ஸ்” என்ற செயலியை உருவாக்கியதாக கூறப்படும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 25 வயதான வெப் டிசைனர் ஓம்கரேஷ்வர் தாகூர் என்பவரை டெல்லி காவல்துறை ஜனவரி 8 அன்று கைது செய்தது. இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இணையதளத்தில் ‘ஏலத்தில்’ விட்ட சுல்லி டீல்ஸ் செயலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்து 5 மாதங்களுக்கும் பிறகு தாகூரை காவல்துறை கைது செய்துள்ளது.

“பிசிஏ பட்டம் பெற்ற தாகூர் ட்விட்டரில் உள்ள டிரத்மஹாசபாவின் உறுப்பினர் என்றும், அதில் “இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்ய, ட்ரோல் செய்ய கூறியதாகவும் அதனால் கிட்ஹப்பில் சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கி டிரத்மஹாசபா குழுவின் உள்ள அனைவருக்கும் அதனை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது என்று தாகூர் கூறியதாக” காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?

மேலும் “தாகூர் தனது ட்விட்டர் கணக்கில் இந்த ஆப்பை பகிர்ந்துள்ளதாகவும், குழுவில் உள்ள உறுப்பினர்களால் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டதாகவும்” காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த்துள்ளனர்.

“சுல்லி டீல்ஸ்” செயலியால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பிறகு தாகூர் தனது சமூக வலைதள கணக்குகள் அனைத்தையும் அழித்துவிட்டதாகவும், அவரின் மடிக்கணினி மற்றும் தொலைபேசி உள்ளிட்டவைகளை கொண்டு இது சம்பந்தமான தகவல்களை மீட்டெடுக்க முயற்சி செய்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு, பல இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் ‘புல்லி பாய்’ என்ற செயலியில் அடையாளம் தெரியாத நபர்களால் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில், ‘இப்பெண்கள் விற்பனைக்கு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான வழக்கை புதிய குழு விசாரிக்கும் – உச்சநீதிமன்றம்

அந்த “புல்லி பாய்” செயலியை உருவாக்கியதில் முக்கிய நபராக கருதப்படும் நிராஜ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு 7 நாள் காவல்துறை காவலில் உள்ள நிலையில் ‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கிய ஓம்கரேஷ்வர் தாகூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் பிஷ்னோய் மற்றும் தாக்கூர் ஆகியோர் தொடர்பு கொண்டு “சுல்லி டீல்ஸ்” ஆப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டதாக டிரத்மஹாசபா குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்