Aran Sei

பிரதமர், அமித்ஷா குறித்த காணொளியை பகிர்ந்த மலையாளக் கவிஞர் – கணக்கை முடக்கிய முகநூல் நிர்வாகம்

பாஜக தலைவர்கள் மற்றும் கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்த நகைச்சுவை காணொளிகளை பதிவிட்ட மலையாளக் கவிஞர் கே. சச்சிதானந்தனின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் குழுக்களை முகநூல் நிறுவனம் கட்டுப்படுத்தவில்லை – மக்கள் உரிமை அமைப்பினர் குற்றச்சாட்டு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்வி  குறித்த நகைசுவை காணொளிகளை முகநூலில் பதிவிட்டதற்காக, கடந்த மே 7 ஆம் தேதி  மலையாளக் கவிஞர் கே. சச்சிதானந்தனின் முகநூல் கணக்கு 24 மணிநேரம் முடக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீங்கள் முகநூலில் பதிவிடும் பதிவை மற்றவர்கள் தவறாக உள்ளதாக கருதுகிறார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மோடியின் வங்கதேச வருகைக்கு எதிரான போராட்டம் – இரண்டு நாட்களாக இணையதளம் முடக்கப்பட்டதாக முகநூல் தகவல்

அதுமட்டுமல்லாது, லான்செட் கட்டுரையை பதிவிட்டபோது அவரது கணக்கு முடக்கப்பட்டது என்றும்  கே. சச்சிதானந்தன் நினைவுப்படுத்தியுள்ளார்.

மலையாளத்தின் மிகமுக்கிய கவிஞரான  கே. சச்சிதானந்தன், சாகித்திய அகாடமி விருது உட்பட எண்ணற்ற விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்