Aran Sei

பக்தாஷ் அப்டின்: அதிகாரத்தை எதிர்த்த மக்கள் கவிஞன் மறைந்தார்

ரானிய அரசின் செயல்பாடுகளின் மீது அதிருப்தி அடைந்து அதற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்ட ஈரானிய கவிஞரும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான பக்தாஷ் அப்டின் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்றுநோயால் மரணமடைந்ததாக ஜனவரி 8 ஆம் தேதி ஈரானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

“ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரம் மேற்கொண்டதற்காகப் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பக்தாஷ் அப்டின் ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர்ப்பிழைத்துளார். ஆனால் இரண்டாவது முறையாக கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டபொழுது சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார் என்று ஐ.எஸ்.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உ.பி.யில் தொழுவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பசு – விலங்குகளைக் கொடுமை படுத்தியதாக மேலாளர் மீது வழக்கு

“கொரோனா தொற்றுநோய் இயற்கையாக மரணத்தைக் கொடுக்கும் என்றாலும் பக்தாஷ் அப்டினின் மரணத்திற்கான ஒவ்வொரு படியிலும் ஈரானிய அரசாங்கம் உதவியது” என்று உரிமைகள் குழு பென் அமெரிக்கா ட்விட்டரில் கூறியுள்ளது.

கடந்தாண்டு கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அப்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் படுக்கையில் கட்டி போடப்பட்டிருந்த படம் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

பக்தாஷ் அப்டின் இறப்பதற்கு முன்பாக, “ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்காக” ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அப்டினுக்கு ஒழுங்காக மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்று பென் அமெரிக்கா மற்றும் 18 பிற உரிமைகள் குழுக்கள் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனிக்கு கடிதம் எழுதியிருந்தனர்,

மகாராஷ்ட்ராவில் வெகு வேகமாகப் பரவும் கொரோனா – அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை

பக்தாஷ் அப்டின் இறந்த சில மணிநேரங்களில் ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடகங்களில் அவரை பற்றிய பல்லாயிரக்கணக்கான பதிவுகள் பகிரப்பட்டன.

ஈரானிய எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பக்தாஷ் அப்டின், ரேசா கந்தன் மஹாபாடி மற்றும் கீவன் பஜன் ஆகியோருக்கு இந்தாண்டு அக்டோபரில் 2021 ஆம் ஆண்டிற்க்கான PEN/Barbey எழுதுவதற்கான சுதந்திரம் என்ற விருதை பென் அமெரிக்கா வழங்கியுள்ளது.

Source : reuters

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்