அடிப்படை மூலதனத்தை மேம்படுத்தும் விதமாகப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நடப்பு காலாண்டில் 3,200 கோடி ரூபாயை திரட்டப் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி திட்டமிட்டுள்ளது.
2020 ஆண்டு டிசம்பர் மாதம் தகுதிவாய்ந்த நிறுவன வேலைவாய்ப்பு (கியூஐபி) லிருந்து ரூ.3,788.04 கோடி திரட்டியதை அடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் அரசாங்கத்தின் பங்கு 85.59 % லிருந்து 76.87% ஆகக் குறைந்துள்ளது.
விவசாய போரட்டத்தில் பேருந்தை தாக்கும் சீக்கியர்கள் – உண்மை சரிபார்ப்பு
பங்கு மற்றும் கடன் விற்பனைமூலம் 14 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து, ஏடி -1 பத்திரங்களிலிருந்து ரூபாய் 3 ஆயிரம் கோடி ரூபாய், இரண்டாம் அடுக்கு பத்திரங்களிலிருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய், கியூஐபியிலிருந்து 7 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும், “கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் அடுக்கு பத்திரங்களிலிருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் கியூஐபியிலிருந்து 3,788.04 கோடி ரூபாய் திரட்டப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம் ஏற்கனவே ஏடி-1 பத்திரங்களிலிருந்து 500 கோடி ரூபாய் திரட்டப்பட்டுவிட்டது. எனவே இந்தக் காலாண்டின் இறுதியான மார்ச் மாதத்திற்குள், ஏடி-1 ரக பத்திரங்களிலிருந்து மேலும் 2,500 கோடி ரூபாய் திரட்டப்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்” எனப் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன ராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ராவ், “சந்தையிலிருந்து பொருத்தமான நேரத்தில் கியூஐபிலிருந்து மீதமிருக்கும் 3,200 கோடி ரூபாய் திரட்ட நாங்கள் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறோம்… அது இந்த நிதியாண்டிற்குள்ளும் இருக்கலாம்” என்றும், “தற்போது இருக்கும் மூலதன போதுமான விகிதம், இந்த நிதியாண்டிற்கு மட்டுமல்ல, அடுத்த நிதியாண்டிற்கும் போதுமானதாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
யூடிஐ மியூட்சுவல் பண்டில் இருந்த முக்கியமற்ற சொத்துக்களை பஞ்சாப் நேஷனல் வங்கி விற்றிருப்பதாகவும், 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள், அசல் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் மேலும் 500 கோடி நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் ராவ் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்கள் – வருமான வரி வலைக்குள் சிக்க உள்ள விவசாயிகள்
மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டில் மொத்த லாபம் 23,298 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும், இதற்கு முன்பு இது 15,967.94 கோடி ரூபாயாக இருந்ததாகவும், இந்த நிதியாண்டை 2 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்துடன் நிறைவு செய்யப் பஞ்சாப் நேஷனல் வங்கி திட்டமிட்டிருப்பதாக, ராவ் கூறினார்.
Sources : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.