Aran Sei

கொரோனா விதிகளை மீறினால் 5000 அபராதம் விதிக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

ரண்டாவது அலையில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதற்கு பொது இடங்களில் முகக்கவசம் அணியாதது, பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காததே காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் “தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை, எவரும் நினைத்துப் பார்த்திராத வகையில் உயர்ந்திருக்கிறது”. கொரோனா பரவலின் வேகம் பல மடங்கு அதிகரித்திருப்பதாக ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு தற்காலிகமான ஏற்பாடு – ஒபிஎஸ்: கடும் கண்டனம் தெரிவித்த ராமதாஸ்: அதிமுக கூட்டணியில் குழப்பமா?

மேலும், ஏப்ரல் மாதத்தில் கொரோனாவின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுதலையாகிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 6ஆம் தேதி தினசரி கொரோனா பரவல் 562 மட்டும்தான். ஆனால், கடந்த ஒரு மாதத்தில் இந்த அளவு 648% அதிகரித்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும், இந்த உண்மையைப் பொதுமக்கள் புரிந்துகொண்டு பாதுகாப்போடு செயல்பட வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரறிவாளன் விடுதலையில் உச்சநீதிமன்ற கெடு முடிந்தும் ஆளுனர் முடிவெடுக்காதது அநீதி: ராமதாஸ் குற்றச்சாட்டு

அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பதன் வழியாக மட்டுமே கொரோனா வைரஸ் பரவல் வேகத்தை முழுமையாகக் குறைக்க இயலும். தமிழ்நாட்டில் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளதால், அதற்கு மாற்றாகத் தேவையற்ற விஷயங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

’பாமகவின் முதல்வர் வேட்பாளரை ராமதாஸ்தான் அறிவிப்பார்’ – பாமக தலைவர் ஜி.கே.மணி

தற்போதைய சூழலில் பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், கொரோனா விதிகளை மீறினால் அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் விதிப்பது, சிறை தண்டனை அளித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்