தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகுக் கவிழ்ப்பு என இலங்கை கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இன்று (அக்டோபர் 19) தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ், “வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களின் படகை சிங்களக் கடற்படைக் கப்பல் மோதிக் கவிழ்த்துள்ளது. அதில், மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கிவிட்டனர்; அவர்களில் ஒருவர் மாயமாகி விட்டார். சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களின் படகை சிங்களக் கடற்படை கப்பல் மீதி கவிழ்த்துள்ளது. அதில் மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கி விட்டனர்; அவர்களில் ஒருவர் மாயமாகி விட்டார். சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது!#IndianFishermen
— Dr S RAMADOSS (@drramadoss) October 19, 2021
சிங்களப் படைத் தாக்குதலில் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ராஜ்கிரணை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவியும், சேதமடைந்த படகுக்கு இழப்பீடும் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகுக் கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். சிங்களக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.