Aran Sei

பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டத்தை புறக்கணித்த பாமக: பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வை எட்ட அமைச்சர் உறுதி

திருக்கோவிலூர் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டத்தை, அதன் கூட்டணி கட்சியான பாமக புறக்கணித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் சார்பில் பாஜக மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் போட்டியிடுகிறார்.

இவர் முன்பு பாமகவில் பல்வேறு பொறுப்புகள் வகித்திருந்தார். 2006-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அப்போதைய முகையூர் தொகுதியில் திமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

’பாமகவின் முதல்வர் வேட்பாளரை ராமதாஸ்தான் அறிவிப்பார்’ – பாமக தலைவர் ஜி.கே.மணி

இதைத் தொடர்ந்து, பாமக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாமகவில் இருந்து விலகித் திமுகவிலும், பின்பு பாஜகவிற்கும் மாறினார்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 16) மாலை திருக்கோவிலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம், அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தை ஒட்டு மொத்த பாமக நிர்வாகிகளும் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.

பாமக நிர்வாகிகள் புறக்கணிப்பு செய்ததை அறிந்த அமைச்சர் சிவி.சண்முகம், விரைவில் பாமக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணுவோம் என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்