Aran Sei

நாடாளுமன்றத்தில் அதானி பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி எதுவும் செய்வார் – ராகுல்காந்தி

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி தன்னால் இயன்றதை செய்வார் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி புகார் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இதனால் ஏற்படும் அமளி காரணமாக நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.

அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் – வைகோ கோரிக்கை

இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று (பிப்ரவரி 6) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, “நான் பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு பற்றியும், தொழில் அதிபர்களுடனான அதன் நெருக்கம் பற்றியும் பேசி வருகிறேன். அதானி விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், ஒன்றிய அரசு விவாதம் நடத்த விரும்பவில்லை. அதைக்கண்டு பயப்படுகிறது.

பிரதமர் மோடி அந்த விவாதம் நடப்பதை தவிர்க்க தன்னால் இயன்றதை எல்லாம் செய்வார். அதற்கு காரணம் இருக்கிறது. அது உங்களுக்கே தெரியும். ஆனால் உண்மை வெளிவர வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் வெளிவர வேண்டும். அதானிக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பதை நாடு தெரிந்து கொள்ள வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Source : indianexpress

Maruthaiyan exposes the truth about adani and modi | Proofs of Adani Scam | Hindenburg research

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்