Aran Sei

‘அம்பானி, அதானியின் நெருக்குதலின் கீழ் பிரதமர் மோடி – விவசாய சங்கத் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹன்

விவசாய சட்டங்களை ரத்து செய்யும் முடிவு பிரதமர் மோடியின் கையில் இல்லை, அவர் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோரின் அழுத்ததில் உள்ளார் என பாரதிய விவசாய சங்கத்தின் பிரிவான ஏக்தா உக்ரஹான் அமைப்பின் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான் தெரிவித்துள்ளதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளார்.

“இது வெறும் வாய்வழி குற்றச்சாட்டு அல்ல, ஜனவரி 15 ஆம் தேதி மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கு இடையில் நடைபெற்ற கடைசி கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளிப்படுத்தியது தான்” என அவர் கூறியுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ருவாண்டா, குஜராத், ஈழ இனப்படுகொலைகளிலும் உலக அரசியலிலும் வலதுசாரி ஊடகங்கள் – பகுதி 5

ஜலந்தர் மாவட்டம், முதாதா கலான் கிராமத்தில் ’மஸ்தூர் கிசான் ஏக்தான் மகா பேரணியில் கலந்து கொண்ட ஜோகிந்தர் சிங், ”விவசாய சட்டங்களை மோடி திரும்பப் பெற்றால், அடுத்த நாளே அதானியும், அம்பானியும் வருவார்கள் என மத்திய அமைச்சர் தோமர் கூறியதை கேட்டால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்” என பேசியதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலதிபர்களின் வழிமுறை வேறானது என கூறிய ஜோகிந்தர், ”அம்பானியும்,அதானியும் சாலைகளை மறித்துப் பார்த்திருக்கிறீர்களா?, அவர்  சாலைக்கு வரமாட்டார்கள். மாறாக, அவர்கள் உங்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள்” என தெரிவித்ததாக, தி வயர் கூறியுள்ளது.

மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் சட்டங்கள் – தொழிலாளர் அமைச்சகம் தகவல்

பிரதமர் மோடி தனது உரைகளில், விவசாய சட்டங்களின் கீழ் எந்த விவசாயியும் நிலத்தை இழக்க மாட்டார் என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய ஜோகிந்தர், “விவசாய சட்டங்களில் அத்தகைய உட்பிரிவு இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் பசுமைப் புரட்சியிலும் அத்தகைய ஒரு விதி இல்லை. பசுமைப் புரட்சியின் கீழ், விவசாயிகள் தங்கள் நிலங்களை இழப்பார்கள் என்று  எங்கும் குறிப்பிடப்படவில்லை. பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டபோது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசு இந்த இனிப்பு நஞ்சை விவசாயிகளுக்குக் கொடுத்தது, நாங்கள் அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொண்டோம். இன்று அந்த விஷத்தின் விளைவுகள் அனைவரும் பார்க்கிறோம், ” என்று அவர் கூறியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்