Aran Sei

‘ஏர் இந்தியா தனியாருக்கு விற்கப்பட்டது அரசின் அர்ப்பணிப்பை காட்டுகிறது’- பிரதமர் மோடி

ர் இந்தியா விமான நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டது இந்திய ஒன்றிய அரசின் அர்ப்பணிப்பையும் பொறுப்புணர்வையும் காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று(அக்டோபர் 11), இந்திய விண்வெளி சங்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

அப்போது, “ஒன்றிய அரசு நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வெற்றிகரமாக தனியார்மயமாக்கியுள்ளது. இது ஒன்றிய அரசின் அர்ப்பணிப்பையும் பொறுப்புணர்வையும் காட்டுகிறது. தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதுதான் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்தான ஒன்றிய அரசின் கொள்கை ஆகும்” என்று கூறியுள்ளார்.

ஏர் இந்தியா – வரலாறும் செயல்பாடுகளும்

விண்வெளித்துறை தொடங்கி பாதுகாப்புத்துறை வரை தனியார்மயத்தை அனுமதிப்பது குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனது அரசாங்கம் நாட்டு நலனையும் பல்வேறு பங்குதாரர்களின் தேவைகளையும் மனதில் வைத்தே செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்திய நாடு இத்தனை பெரிய அளவிலான சீர்திருத்தங்களைக் மேற்கொள்கிறதெனில், அதற்கு காரணம் ஆத்மநிர்பர் பாரத்(சுயசார்பு இந்தியா) என்ற தெளிவான தொலைநோக்கு பார்வைதான். இதற்கு முன்னர், இந்தியாவில் இப்படியான ஒரு தீர்க்கமான ஒன்றிய அரசு அமைந்ததே இல்லை” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்