Aran Sei

வெளிநாட்டில் உள்ள தனது நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் மோடி, நாட்டின் இளைஞர்களை வேலை இல்லாமல் ஆக்குகிறார் – ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் உள்ள தனது நண்பர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதாகவும், நாட்டின் இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் ஆக்குவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒன்றிய அரசை விமர்சித்துத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, மத்திய துணை ராணுவப் படையில் காவலர்களாக சேர்வதற்கு தேர்வெழுதிய இளைஞர்களும், பெண்களும் பணி நியமனக் கடிதம் கிடைக்காததால் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

‘அகமதாபாத்தின் பெயரை ஏன் அதானிபாத் என்று மாற்றக் கூடாது’ – பாஜகவுக்கு தெலங்கான அமைச்சர் பதிலடி

மேலும் இது குறித்து எழுதியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,  வெளிநாடுகளில் உள்ள தனது நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பிரதமர், தனது சொந்த நாட்டு இளைஞர்களை வேலை இல்லாமல் விட்டுவிட்டார். ஏன் இவ்வளவு பாகுபாடு” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலை: முகப்பருவைக் கிள்ளியதால் மாணவர் உயிரிழந்ததாக ஆசிரியர் மீது புகார் – அரசியல் பழிவாங்கல் என ஆசிரியர் குற்றச்சாட்டு

மத்திய துணை ராணுவப் படையில் காவலர்களாக இணைவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் இதுவரை பணி நியமன ஆணை கிடைக்கவில்லை. இதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பகிர்ந்துள்ள காணொளி நாக்பூரில் இருந்து டெல்லிக்கு அவர்கள் கால்நடையாக சென்றது பதிவாகியிருக்கிறது.

Source: newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்