பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் வந்துள்ள நிலையில், “ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வீழ்த்துவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தையும் கூட்டாட்சி உணர்வையும் பிரதமர் மோடி முடக்குகிறார் என்று தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அரசின் அமைப்புகளை பிரதமர் பயன்படுத்துவதாகவும், பாஜக அல்லாத அரசுகளை துன்புறுத்துவதாகவும் கே.சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றியத்தில் உள்ள பாஜக அரசை கவிழ்க்க தயங்கமாட்டேன் என்று எச்சரித்துள்ளார்.
”“பாஜகவால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நான்காவது மாநிலம் மகாராஷ்டிரா. தெலுங்கான மாநிலத்தில் உள்ள தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் ஆட்சியும் கவிழும் என்று ஒன்றிய அரசின் அமைச்சர் ஒருவர் கூறுகிறார். பார்ப்போம். 119 சட்டமன்றத் தொகுதிகளில் 103 இடங்களில் எங்களிடம் பலம் உள்ளது. சர்வாதிகார ஆட்சி நடக்கட்டும் என்று கூறியுள்ளார். .
தெலங்கானா மக்கள் தனி மாநிலத்தை அடைவதற்காக 60 ஆண்டுகளாக போராடி வந்தனர். மற்றொரு சுற்றுப் போராட்டத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள ஒரு சில தொழிலதிபர்களுக்கு விற்பனையாளராக பிரதமர் பணியாற்றுகிறார். இலங்கை மின் ஒப்பந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் மோடி தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார் என்று தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.
Source: timesofindia
Udaipur சம்பவமும் BJP – RSS ன் சதி திட்டமும் | Vanchinathan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.