இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனைவராலும் நேசிக்கப்படும், மிகவும் பிரபலமான, துடிப்பான, தொலைநோக்கு எண்ணம் கொண்ட தலைவர் என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தெரிவித்துள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம், குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைர விழா நடைபெற்றது. முன்னதாகக் குஜராத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியவரும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் எம்.ஆர்.ஷா கலந்து கொண்டார்.
அந்த விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா, குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைர விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அடைவதாகவும் அதிலும் குறிப்பாக, அனைவராலும் நேசிக்கப்படும், மிகவும் பிரபலமான, துடிப்பான, தொலைநோக்கு எண்ணம் கொண்ட இந்திய பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் கூடுதல் பெருமிதம் அடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
பிஎம்-கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை – முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோடிக்கு கடிதம்
குஜராத் உயர்நீதிமன்றம் அதிகாரத்தின் எல்லைகளை அல்லது நடத்தைகளை மீறி எப்போதும் நீதி வழங்கவில்லை என்று தெரிவித்த நீதிபதி, ”இந்திய அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட ஜனநாயக குடியரசின் இன்றியமையாத அம்சங்களில் ஒன்று பாராளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப் பிரிவாகும்” என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் கும்பல்நீதி ஆதிக்கம் – கண்ணை மூடிக் கொள்ளும் இந்தியர்கள்
இதையடுத்து பேசிய பிரதமர், நமது நாட்டின் நீதித்துறை, மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், தனிப்பட்ட சுதந்திரத்தை நிலைநிறுத்துவதிலும், தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய சூழ்நிலைகளிலும் தனது கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் நீதிபதி அருண் மிஸ்ரா பிரதமர் மோடியை பாராட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியாக இருக்கும் மிஸ்ரா, மோடியை “சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொலைநோக்கு எண்ணம் கொண்ட தலைவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.