பாரத் மாதா கி ஜெய் என்று சொல்லாதீர்கள் எனக் கூறிவந்தவர்கள் இப்போது மக்களிடம் வாக்கு கேட்க வருகிறார்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
பீகாரில் மொத்தம் 3 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் கட்டம் முடிந்த நிலையில், 2 வது கட்டத் தேர்தல் இன்று நடந்தது. இதில், 4வது முறையாகப் பிரச்சாரம் செய்யப் பிரதமர் சென்றுள்ளார்.
#WATCH PM Modi addresses election rally in Bihar's Saharsa https://t.co/E0Vy1R38ss
— ANI (@ANI) November 3, 2020
இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, “பீகார் தெளிவான சேதியைத் தெரிவித்துள்ளது. ஆரம்ப கட்ட தகவலின்படி மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடிவு செய்து விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மோடி, “பீகார் மக்கள் ஒரு முடிவுடன் உள்ளனர். மிகவும் தெளிவாக உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் வாக்களிப்போம் என உறுதியுடன் உள்ளனர்,” என்று கூறியுள்ளார்.
“பிஹாரில் ரவுடிகள், மிரட்டிப் பணம் பறிப்பவர்கள் காணாமல் போய்விட்டார்கள். சட்டத்தின் ஆட்சி வெற்றி பெற்றுள்ளது. குடும்ப ஆட்சி முறை ஜனநாயகத்தின் முன் தோற்கடிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“காட்டாட்சியின்போது (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), ஏழை மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைக் கூட இழந்தனர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வந்தபின்புதான் விளிம்புநிலை மக்களுக்கு அந்த உரிமைகள் கிடைத்தன,” என மோடி தெரிவித்துள்ளார்.
“15 ஆண்டுகளாக மாநிலத்தைக் ஆட்சி செய்த குடும்பத்தினர், ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கி ஜே’ என்று முழங்கக் கூடாது என்றனர். இப்போது அவர்கள் மக்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளனர். பீகார் தேர்தல்களின்போது இதுபோன்றவர்களுக்கு தக்க பதிலை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது,” என்று அவர் விமர்சித்துள்ளார்.
There is a group of people that doesn't want you to say 'Bharat Mata ki Jai' or 'Jai Shri Ram.' All of them have now come together & asking for votes from the people of Bihar. There's a need to give a befitting answer to such people in #BiharElections2020: PM Modi in Saharsa. pic.twitter.com/Z8ZyvfjhJB
— ANI (@ANI) November 3, 2020
“ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்த பாதுகாப்பின்மை, குடும்ப ஆட்சி ஆகியவை நிதிஷ் குமார் ஆட்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்டன,” என மோடி கூறியுள்ளார்.
“நிதிஷ் குமார் ஆட்சியில் இரவு நேரத்தில் கூட மக்கள் அச்சமின்றி சாலையில் நடக்கிறார்கள். பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது,” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு வீட்டுக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கிச் சாதித்துள்ளோம். அடுத்ததாக, பைப் மூலம் கேஸ் விநியோகம் செய்யப் போகிறோம். இந்த 10 ஆண்டு காலத்தில் சாலைகள், விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருப்பவைத் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன,” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் இந்த கருத்தை எதிர்த்துப் பலரும் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
I am an Indian Hindu and I will neither say Bharat Mata ki Jai nor Jai Shri Ram, I am not an idiot to be fooled by slogans when migrants , soldiers, women , Dalits are not even considered as human under your regime
— پربھا (@deepsealioness) November 3, 2020
“நான் ஒரு இந்திய இந்து, நான் ‘பாரத் மாதா கி ஜெய்’ அல்லது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொல்லமாட்டேன். புலம்பெயர் தொழிலாளர்கள், ராணுவ வீரர்கள், பெண்கள், தலித்துகள் உங்கள் ஆட்சியின் கீழ் மனிதர்களாகக் கூடக் கருதப்படாதபோது நான் முழக்கங்களால் முட்டாளாக மாட்டேன்,” என்று ஒரு பெண் தெரிவித்துள்ளார்.
back to communal politics, pheww expected tha
— Nehr_who? (@Nher_who) November 3, 2020
“வகுப்புவாத அரசியலுக்குத் திரும்பிவிட்டீர்களா? இது எதிர்பார்க்கப்பட்டது தான்,” என்று மற்றொருவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.