Aran Sei

யோகி ஆதித்யநாத்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்தாத பிரதமர்; உ.பி பாஜகவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட மோடி படம் – பாஜகவில் பிளவா?

த்தரபிரதேச பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து, பிரதமர் மோடியின் படமும், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஜே.பி.நட்டாவின் படமும் நீக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்சியும் ஒன்றிய ஆளும் கட்சியுமான பாஜகவின் மாநிலப் பிரிவுகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் வழமையாக, பிரதமர் மோடி, கட்சியின் தேசிய செயலாளர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் அம்மாநில பாஜக தலைவர்களும் இடம்பெறுவர். தமிழ்நாடு, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் போன்ற அனைத்து மாநில ட்விட்டர் பக்கங்களிலும் இந்த வழக்கம் நடைமுறையில்தான் உள்ளது.

இந்நிலையில், திடீரென்று உத்தரபிரதேச பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் படங்கள் நீக்கப்பட்டுள்ளது புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.

‘கொரோனா மருந்துகளுக்கான வரியை நீக்க வேண்டும்’ – பாஜக ஆளாத ஏழு மாநில அரசுகள் கூட்டாக வலியுறுத்தல்

நேற்று முன்தினம் (ஜூன் 5) பிறந்தநாள் கொண்டாடிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காதது, இந்த விவாதங்களுக்கு ஆரம்ப புள்ளியாக உள்ளது. கட்சி பேதமின்றி, நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு, உத்தரபிரதேச சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சர்ச்சைகள் உத்தரபிரதேச பாஜகவில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்